பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அரவிந்த மலருள் நீங்கி அடியிணை படியில் தோயத் திருஇங்கு வருவாள்-கொல்லோ என்றகம் திகைத்து நின்ற " |அரவிந்தம்-தாமரை, இணை-இரண்டு; திரு-இலக்குமி, அகம்-மனம்) எனத் திகைத்து நின்ற சூர்ப்பணகை அழகு தன்னைப் படுத்தும் பாட்டைச் சொல்லுகின்றாள்; கண்பிற பொருளிற் செல்லா; கருத்தெனில் அஃதே கண்ட பெண்பிறந் தேனுக் கென்றால் என்படும் பிறருக்கு " என்கின்றாள். "சிறந்த மகளிரைக் கண்ட ஆடவர்க்குக் கண்ணும் கருத்தும் அவ்வடிவத்தை விட்டு நீங்காமல் அதிலே பதிந்து அழுந்துதல் உலகியற்கை; அங்ங்ணமின்றி இவளழகு பெண்பாலாகிய எனக்கே கண்ணும் கருத்தும் வெளிச் செல்லாதபடி வியப்பைத் தருகின்றதே! இஃது ஆடவருக்கு எந்நிலையை விளைவிக்குமோ!" என அதிசயித்துத் திகைத்து நிற்கின்றாள் அழியா அழகுடையானிடம் தன் மனத்தைப் பறிகொடுத்த சூர்ப்பனகை. தாடகையின் வரலாறு கூறி அவளை முடித்தற்கென்று இராமனைக் கானகத்தில் நடத்திச் சென்ற விசுவாமித்திரன் இராமனது தோளழகில் ஈடுபட்டு அவனை, ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்! " |அவாவும்-விரும்பும்) 11 கம்ப. ஆரணிய சூர்ப்பணகை-60 12 மேலது.60 13 பாலகா, தாடகைவதை-41