பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 55 என்று விளித்துப் பேசுகின்றான். இராமனது தோளினது அழகின் சிறப்பு நோக்கி ஆடவரும் மனத்தால் மகளிர் தன்மையை அடைந்து அத்தோளினால் தழுவப் பெற வேண்டுமென்று காதல் கொள்ளுமாறு உள்ளவனே ! என்கின்றான். மகளிர் 'அழியா அழகுடையானின் தோளழகில் ஈடுபட்டுக் காதல் கொள்வர் என்பது கூறவேண்டுவதில்லை. ஆடவர் என்று பொதுப்படக் கூறியதனால் முற்றத்துறந்த முனிவரும் இவனழகில் துவக்குண்டு ஈடுபட்டு நைவர் என்பது பெறப்படும். தண்டகாரணிய முனிவர்கள் இவனழகில் ஈடுபட்டுத் தழுவிக் கொள்ள நினைத்ததை யாவரும் அறிவர். இந்த நிலையைக் கிருஷ்ணாவதாரத்தில் இவர்கள் கோபியராகப் பிறந்து தம் நினைவை-ஆர்வத்தை-நிறைவேற்றிக் கொண்டனர் என்பது வரலாறு. பக்தர்களை இவ்வழகு ஈடுபடுத்தும் பாடு சொல்லுந்தரமன்று. அழகிய மணவாளனின் ஒவ்வோர் உறுப்பினழகிலும் ஈடுபட்டுப் பேசிய திருப்பாணாழ்வார், கொண்டல் வண்ணனைக் கோவ னாய் வெண்ணெய் உண்ட வாயன் - என்உள்ளம் கவர்ந்தானை அண்டர்கோன் அணியரங் கன்என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே. " கொண்டல்-மேகம்; வண்ணன்-நிறத்தன்; அண்டர்கோன்-நித்தியசூரிகட்குத் தலைவன்) என்று முத்தாய்ப்பாகக் கூறுவர். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி அழகிய மணவாளரை, என் அரங்கத்து இன்னமுதர், குழல் அழகர் வாய் அழகர், கண் அழகர், 14 அமலனாதிபிரான்-10