பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு கொப்பூழில் எழுகமலிப் பூ அழகர்!" " என்று பேசி அவன் அழகில் ஆழங்கால்படுவர். மணக்கால் நம்பிகள்-அழகிய மணவாளனைக் காட்டி-ஆளவந்தாரைப் பக்தி நெறிக்குத் திருப்பின வரலாறும் உண்டு. பிள்ளை உறங்காவில்லி தாசரையும் பொன்னாச்சியாரையும் அழகிய மணவாளரின் எழிலுருவத்தைக் காட்டி அவர்களை விஷய காமத்தினின்றும் பகவத் விஷய காமத்திற்குக் கொண்டு செலுத்திய பெருமையை எம் பெருமானார் பெறுகின்றார். நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை அழகரின் திருமேனி அழகில் ஈடுபட்டத் திறம் தனிச்சிறப்பு வாய்ந்தது. கற்பகத் தரு கப்பும் கிளையுமாகப் பனைத்துப் பூத்தாற்போலே நிற்கின்றான் எம்பெருமான், அவனது அழகு வெள்ளம் அலைமோதி ஆழ்வார்மீது பாய்கின்றது. எம்பெருமானை நோக்கி வினவுகின்றார்: முடிச்சோதி யாய்! உனது முகச்சோதி மலர்ந்ததுவோ? அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ? படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே! கட்டுரையே. " (முடிதலை அடி-திருவடி, படிச்சோதி, இயற்கையான காந்தி, கடி-திருவரை) என்ற திருப்பாசுரத்தில், "நின் திருமுக மண்டலத்தின் காந்தி மேல் மூலமாகக் கிளர்ந்து கிரீடச் சோதியாக ஆயிற்றா? நின் திருவடிகளின் ஒளிதான் ஆசன பதும மாகத் தென்படு கின்றதா? நின் திருவரையின் சோதிதான் படிச்சோதி ஆடையாயும் பல்கலனாயும் கலந்ததுவோ! 15 நாச், திரு. 11 ; 2 16 திருவாய் 3.1:1