பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& வருணனை வளம் * 57 அடியேனுக்குத் தெரிய அருளிச் செய்ய வேண்டும்” என்கின்றார். ஒவ்வோரழகில் ஈடுபடுகின்ற காலத்தில் அஃதொன்றே சிறந்ததாய்த் தோன்றி நிற்கும் தன்மையை இப்பாசுரத்தில் தெரிவிக்கின்றார் ஆழ்வார். இந்நிலை இராமன் மிதிலை மாநகரில் உலாப் போந்தபோதுஅவனது திருமேனியழகினைக் கண்ட மாதரின் நிலையை நினைவூட்டுகின்றது. தோள்கண்டார் தோளே கண்டார்; தொடுகழல் கமலம் அன்ன; தாள்கண்டார் தாளே கண்டார்; தடக்கை கண்டாரும் அஃதே; வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்? ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை யொத்தார். 7 (கமலம்-தாமரை, தாள்-திருவடி, வாள்கொண்ட வாளையொத்த; ஊழ்-பெருமை; உருவு-வடிவு) ஒவ்வோர் உறுப்பையும் கண்டவர்கள் . அழகிலேயே அழுந்திவிட்டார்கள். அதனதன் அ, ஒர் எல்லையிலாமையாலே அதனதனினின்றும் கவனத்தைப் பிறிதொன்றில் திருப்ப முடியாது அதனதன. அழகிலேயே ஆழ்ந்து விட்டார்கள் என்பதைத் தெரிவிக் கின்றான் கவிஞன். இந்த அடிப்படையிலும் அடுத்துவரும் பெண்ணின் பெருமையின் அடிப்படையிலும் வாலியாரின் வருணனையின் சிறப்பைக் காணலாம் பெண்ணின் பெருமையைத் தெளிவாக அறிய வேண்டு மானால் தமிழ் முனிவர் திரு.வி.க. அவர்களின் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்ற நூலைப் 17 பாலகா.உலாவி.19