பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ல் பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு படித்து அறிந்து கொள்ளலாம். " இங்கு, பாண்டவர் பூமியில் வாலியார் மூப்பும் மரணமும் அற்ற மாமுனிவர் மார்க்கண்டேயருடன் தருமபுத்திரன் உரையாடுங்கால் பெண்ணின் பொறை நிறை தருமன் பேச்சாக முழுவீச்சில் அமைக்கின்றார். “மாதரர் மேன்மை மகரிஷியே! ஒதற்கரியது; அதுஒதக் கடலினும் பெரியது. மண்மகிமையுறக் காரணம்பெண்; பெண்ணில்லையேல்மண்ணின் மகிமை மண்! அரிவை என்று நாம்அழைப்பது-அணிகள் அணிந்த அறிவை; தெரிவை என்று நாம்தெரிவது-தெய்வ குணங்களின் செறிவை; பாவை என்று நாம்பகர்வது-பண்ணைப் பயிற்றும் ListSöði, 18 இதனை நான் திருச்சி புனித குசையப்பர் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் மாணவனாக இருந்தபோது (1934-36) மேலை அரண்சாலை யில் அக்காலத்தில் இருந்த மாவட்ட வாரிய நூலகத்தில் படித்து அறிந்து கொண்டேன். அதன் முகவுரை என்னைக் கவர்ந்து பின்னர் அறிவியல் அடிப்படையில் இல்லற நெறி (1954) என்ற நூல் எழுதி வெளியிடவும் (கடித உத்தியில்) அதனை அப்பெருமகனாருக்கே அன்புப் படையலாக்கவும் தூண்டியது என்பதை நினைவுகூர்கின்றேன்.