பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 73 மிக்க மனவேதனையுடனும் மனஇறுக்கத்துடனும் தாம் சூதர் சபையில் இருக்கும் ஒருவராகக் கருதி வாலியார் ஈண்டு உரைப்பது. அதே பண்புகளுடன் பாரதி: பாவியர் சபைதனிலே-புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை, ஆவியில் இனியவளை,-உயிர்த் தணி சமந்துலவிடு செய்யமுதை, ஒவியம் நிகர்த்தவளை,-அரு ளொளியினைக் கற்பனைக் குயிரதனைத் தேவியை, நிலத்திருவை-எங்குத் தேடினும் கிடைப்பருந் திரவியத்தை, படிமிசை இசையுறவே-நடை பயின்றிடும் தெய்விக மலர்க்கொடியைக் கடிகமழ் மின்னுருவை,-ஒரு கமனியக் களவினைக் காதலினை வடிவுறு பேரழகை-இன்ப வளத்தினைச். * என்று பாரதியின் கூற்றை, அதை விடச் சற்று வேகமாக, ஆழமாக, எதிரொலிப்பதைக் காண முடிகின்றது. படிக்கும் நாமும் சபையில் இருக்கும் ஒருவராகக் கருதி, நம்மை மறந்து வேதனையுறுகின்றோம். 6 (ஆ) அடுத்து ஆணின் அழகுபற்றிய சில வருணனைகளைக் காண்போம். அழகியாக வந்த இடிம்பி யின் மனம் ( பீமனைப் பற்றி எண்ணும்போது, வருவது: கொல்ல நினைத்தவள்பீமனைப் . புல்ல நினைத்தாள்; தின்ன நினைத்தவள்-பீமனைப் பின்ன நினைத்தாள்! 23 பாரதியார் பாஞ்சாலி சபதம்துகிலுரிதற் சருக்கம்-243,244