பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வருணனை வளம் * 75 ரதத்தில் பூட்டவல்லராவுத்தன் இவன்! பொருப்பு வில்லி-ளித்த கருப்பு வில்லிசனித்தானா மீண்டும்?இவனோடு சல்லா பித்தல் வேண்டும்! நான்தொத்தத் தோதானதோளன்; என்அன்புக்கு உரியஆளன்! (I-பக்.292-93) அரக்கியல்லவா? கனபாடி அவள், தன் உடலுக்கேற்ற வாளிப்பைப் பீமனின் வாளிப்பு நன்கு பொருந்தியிருப் பதாகக் கருதிக் கணிக்கின்றாள். (2) அபிமன்யு: இவன் சுபத்திரையின் மூலம் பார்த்தன் பெற்ற பிள்ளை. இவன் அழகுபற்றி வாலியார் விளக்குவது: வாளிப்புக்கு-ஒரு வியாக்கியானம்; எந்தவில்லிக்குமில்லை-அவனை விஞ்சிய ஞானம்; பற்பலவித்தகர் தந்தது-அவனது வித்தியாதானம்; இந்தவயதிலேயே- அவன் புகழ் விரிந்த வானம்! ஒருபோதும் வைத்த குறி. அகலாது அவன் வாளி; அவன் அத்துணை அறிவாளி; அவன்