பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ல் பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு 7 (அ) ஆண்கள் விரகவேதனை: (1) கீசகன்: விராட மன்னனின் மைத்துனன்; கீழ்மைகளின் மொத்தம். அவன் 'சைவந்தரி என்ற பெயரில் உள்ள திரெளபதியின்மீது காதல் கொள்ளுகின்றான். அவனது விரகவேதனையை அவன் வாய்மொழியாலே கூறும் வாலியார்: "அன்பே ! உனது ஆசையெனும் முட்டையை அலுங்காது நலுங்காது-என் அகத்தினில் வைத்து... அன்றாடம் காக்கிறேன் அடை; அடைந்த பிற்பாடு அந்தப்புரத்துக் கதவுகளை அடை, ஆலிங்கனச் சிறையில் அதிகாலை வரையில்-எனை நீ அடை அடிக்கடி பிழிய 6T邸 அனுமதி; அதரங்கள்-தேன் அடை, ஆறாய் விரகம் என்னுள் அங்கங்கு பெருக அனைத்து நீ அடை; அடையும் இன்பத்தில் அம்பது சதவிகிதம்-நீயும் அடை, ஆதி ஜன்மத்தில்-நீ அடியனிடம் பட்ட கடனை அடை, அடை மொழிக்குள் அடங்கா அழகே! அனுசரி! பின்... அடைமழைதான் ஆனந்தம் மூச்சு விடாது மொழிந்தான்; அசடு வழிந்தான்! (I-பக்.251)