பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

109


மொழியால் அதற்கு என்ன நன்மை? தமிழால் தமிழுக்கே நன்மை உண்டா? தமிழன்.என்னும் மனிதன் வேண்டுமாயின், அம்மொழியால் தான் எவ்வெவ்வாறு உயர்ந்துள்ளான் என்பதை எண்ணிப்பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடும். ஆனால், அதனால் மொழிக்கென்ன பயன்? தனக்கென ஒரு பயன்யும் எதிர்பாராமலே மொழி மக்களுக்குத் தொண்டு செய்கிறது. கலையின் நிலையும் இத்தகையதே எனக் காட்டுகின்றார், மேனாட்டுப் புலவர் ஒருவர்.[1] மொழி பிறவற்றை விளக்குவதற்காகவே வாழ்வது போன்றுதான் கலையும் கலைஞனும் வாழக் காண்கிறோம். கலை தனக்கென ஒன்றையும் தேடி வைத்துக்கொள்ளவில்லை. தான்'பெருமைப்பட் வேண்டும் என்று தருக்குக் கொள்ளவுமில்லை. கலைஞனும் அத்தகையவனே. மேலே கலைஞர் வெற்றியிலே கணட பலகாட்சிகள் அவ்வுண்மையை வலியுறுத்தும். கலைஞர்கள் தமக்கென வாழ வேண்டும் என்று திட்டமிட்டிருப்பார்களாயின், எவ்வளவோ செல்வமும் சீரும் பெற்று உலக வாழ்வில் ஓங்கியிருக்கிக்கூடும். ஆனால், அந்த வாழ்க்கையில் அவர்தம் கவிக்கு வெற்றி யுண்டாகுமா என்று ஐயந்தான் உண்டாகும்.

இனி, கவிதையின் நலனைக் காண முயலின், அதில் முழு வெற்றிபெற முடியுமா என ஐயம் தோன்றலாம். நல்ல கவிதைகளைக் கண்டு, அவற்றில் எங்குச்சுவையுள்ளது என் ஆராய்தல் முடியாதுதான். கவிதையின் திறன் ஆயும் ஒருவ்ன், அதன் ஒவ்வொரு பகுதியையும் உற்று அறிந்தால்தான் தன் மனமறிய முழுத்தொண்டு செய்தவனவான். கவியின் இனிமையோ, அதன் நலனே கவிதையின் ஓர் இடத்தில் மட்டும் நின்று மின்னல்போல மறைந்துவிடக் கூடியதன்று. சூடேறிய வெந்நீரில் அந்தவெப்பம் எவ்விடத்தும் பரவியுள்ளது போன்று, கவிதையிலும் அடிமுதல் முடிவரையும் அதன் நலன் நிரம்பி இருத்தல் அவசியமாகும். அப்படி நிரம்பி இருக்கின்ற


  1. 1. Tta idea of a Great Poetry, by LASCELLES ABERCROMBIE