பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

கவிதையும் வாழ்க்கையும்


மற்றொரு மேலை நாட்டுப் புலவர் கவிதையைப்பற்றிக் கூறும். பண்பாட்டினையும் ஆய்வாளர் நோக்கவேண்டும். உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுள் தொன்மை வாய்ந்தவை சில: தோன்றிய காலம் கணக்கிட முடியாத வகையில் அம்மொழிகள், வாழ்கின்றன. அவற்றுள் சிறந்ததாகிய நம் தமிழ் மொழியும் ஒன்று—ஏன்—உயர்ந்தது. என்றும் கூறிக்கொள்ளப் பெருமையாகத்தான் இருக்கிறது: அந்த மொழிகளைப்பற்றி ஆராய்கின்றார் புலவர். மொழி, முதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து, என்று, எழுத்துக்கு இலக்கணம் கூறினர் பவணந்தியார். ஒலி, அணுக்கள் ஒன்று சேர்ந்தே எழுத்தென்னும் உருப்பெற்றன. அவ்வெழுத்தின் வரி வடிவம் தோன்ற நெடுங்காலத்துக்கு வடிவம் உண்டாகியிருக்க வேண்டும். ஒலியால் உள்ளத்தை அறிந்து, அவ்வொலியைச் செம்மைப்படுத்தி எழுத்தாக்கி, உதட்டன்சைவால் அதன் பொருளை விளக்கிப் வடிவாக்கி எழுத்தினை உண்டாக்க எத்தனை எத்தன் ஆயிரம் ஆண்டுகளோ கழிந்திருக்கவேண்டும் அவ்வாறு உண்டான ஒலி' அமைப்புக்களும், வரி அமைப்புக்களும் நாட்டுக்கு நாடு மாறியே வந்துள்ளன. மொழிநூல் ஆராய்ச்சியாளர்கள் உலகில் எத்தனையோ மொழிகளைக் கணக்கிட்டுள்ளார்கள். அவற்றுள் சில இன்று வழிக்கிழந்தன; சில வாழ்கின்றன; சில செழிக்கின்றன. இத்தகைய மொழிகளின் வளர்ச்சியை, எண்ணின் இவற்றால் யாருக்குப் பயன் இதையும் எண்ணிப் பார்க்க வேண்டுமன்றோ?

மனிதன் தன் உள்ளக் கருத்தை வெளிகாட்டிப் பயன்பட உதவுவதே மொழி விலங்குகளும்.பிறவும் கத்தியும் கதறியும் வேறுவகையாகவும் தம் கருத்தை உணர்த்த அறிவறிந்த் மனிதன்தன்.கருத்தை மற்றவர் உணர்ந்துகொள்ள மொழி என்னும் சாதனத்தைத் கண்டு பிடித்துக்கொண்டான். ஆனால், அதற்காக அவன் நெடுநாள் உழைத்திருப்பான் என்றாலும், அம்மொழி தனக்காக ஏதாவது நன்மையைத் தேடிக் கொள்ளுகின்றதா என்றால் இல்லையென்றுதானே கூறமுடியும்?