பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

107


அவற்றின் இலக்கியத் திறன்ஆய்வு காண இயலாமையே அக் குறைபாட்டிற்குக் காரணம். கம்பராமாயணத்தில் தொடங்கிய ஒன்று, இன்று சங்க இலக்கியம் வரை சென்றுள்ளது. சிலப்பதிகாரம் வேண்டா எனச் சிலரும், பதிற்றுப்பத்துப் போன்ற இலக்கியங்கள், சங்க இலக்கியங்களே அல்ல எனச் சிலரும் பேசுகின்றனர். இவ்வாறே தம்கொள்கைக்கு ஒவ்வாதனவென்று சங்க இலக்கியங்களும் திருக்குறள் போன்றவையும் பிறவும் ஒதுக்கப்பட்டு நிற்பின், இறுதியில் இவர்கள் தமிழ் இலக்கியம் என்று எதை வைத்துக்கொண்டு தங்கள் கலையும். பண்பாடும் உயர்ந்தன என்று பேசுவார்களோ? யாமறியோம்!

ஆராய்பவன் மட்டுமன்றிக் கவிதை ஆக்கும் புலவனும் அவ்வாறே நடுவுநிலை பிறழாதவனாய் இருக்கவேண்டும். மனிதனுக்கென்று கொள்கைகளும் பிறவும் இருப்பதில் தவறில்லை. அக்கொள்கையை உலக மக்களுக்குப் பொதுவாகப் பயன்படுத்தும் வகையில் கவிதை இயற்றும்வழிச் செலுத்தினல், அக் கவிதைகள் சிறந்தவையாக மாட்டா. நாம் மேலே கண்ட[1] நீதிபதியின் உவமை, ஆய்வாளனுக்கு மட்டுமன்றிக் கவிஞனுக்கும், பொருந்துவதாகும். கவிஞர்கள் காட்டிய வழியிலேதான் இன்றும் உலக மக்களில் பெரும்பாலார் செல்கின்றனர். எனவே, அவர்களை நடத்திச் செல்லும் பெரும் பொறுப்பை ஏற்ற கவிஞன், தன் மனம்போனபடி கவிதயை எழுதுவாஞயின், ‘கவிதை' அப் பெயர் பெறத் தகுதியற்று மாய்வது திண்ணம். அதுமட்டும் மாய்ந்தால், நமக்குக் கவலையில்லை. எவ்வகையாலோ அவனைப் பின்பற்றிச் செல்லும் பற்பலர் வாழ்விழந்து வருந்துவரே என்பதை எண்ணும்போது வருந்தாதிருக்க முடியுமோ? மேலே நாட்டுப் புலவருள் ஒருவரான ரிட்லி என்பவர் கொள்கைக்கு அடிமையாகாத கவிஞனே சிறந்தவன் என்றும், அவனே காலங்கடந்த கவியாக வாழ முடியுமென்றும், மற்றவரெல்லாரும் வெறி கொண்டு. துளும்பும் கால எல்லையில் கட்டுண்டு மடிவர் என்றும் திட்ட்மாக எழுதிச் சென்றுள்ளார்.


  1. 1. Poetry and the ordinary reador, by M. R. Ridley