பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

கவிதையும் வாழ்க்கையும்


‘குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைச் செவ்வாய்க்கு மென் கிளி வருந்தியும்’

என்ற இடையெழுத்துக்களின் செயலை அழகுபடக் காட்டுவர். பிற இலக்கியங்களிலும் இவ்வாறு காட்டவும் கூடும். இந்த வகையில் தமிழ் எழுத்துக்களையும் அவற்றால் ஆய சொற்களையும் கொண்டே மக்கள் உள்ளத்துத் தோன்றும் மெய்ப்பாடுகளை உணர்த்தும் கவிதை நலன் சிறந்தது என்பதே நாம் இங்குச் சிந்திக்க வேண்டுவது, இம்முறை எல்லா இடத்துக்கும் பொருந்திய ஒன்று என்று கொள்ள இயலாவிட்டாலும், எழுத்துக்களின் அமைப்பு, மெய்ப்பாடுகளை விளக்க உதவுகின்றது என்பதை மறுக்க முடியுமா? எனவே, கவிதை நலன் இவ்வெழுத்துக்களைக் கொண்டு மேலும் சிறக்கின்றது என்று சொல்வது உண்மையன்றோ!

எழுத்து என்று சொல்லும்போது மற்றொன்று நினைவுக்கு வருகிறது. கலைகளைப்பற்றிக் கூற எழுந்த ஒரு பழமொழி நாட்டில் உண்டு. கைதேர்ந்த சிற்பி ஒருவன் தன் கைவண்ணத் திறனையெல்லாம் காட்டி கல்லில் ஒர் அழகிய நாயின் உருவத்தைச் செய்து முடித்தான். அந்த நாயினைப் பலர் கண்டனர். கலை நலத்தில் தோய்ந்து கருத்திழந்த ஒருவன், அந்த நாயினைக் கண்டு. அதன் வயமேயாகி, அந்த நாயைப் பற்றிப் போற்றத் தொடங்கி விட்டான். ஆனல், அங்கே இருந்த அந்தப் பழைய கல்லக் கண்டிருந்த கலைநலமறியா மற்றொருவன். இது ஒரு கல்லே என்று பேசினன். இருவர் கூற்றும் அவரவர் மனப்போக்கின்படியே சரிதான். இதனலே தான் நாட்டிலே ‘நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லக் கண்டால் நாயைக் காணோம்’ என்ற பழமொழி எழலாயிற்றுப் போலும்! கலை உள்ளம் பெறாத ஒருவனுக்கு அது கல்லாகிறது; கலையில் படிந்த ஒருவனுக்கு அங்கே கல் இல்லை: நாய்தான் காட்சி தருகின்றது. இந்தக் கருத்து, கவிதைக்கு முற்றும் பொருந்துவதாகும். கவிதை நலத்தைத் துய்ப்பார் நாட்டில் மிகக்குறைவே. அவர்கள் இவ்வெழுத்தோவியங்களில் தம்மைப் பறிகொடுத்து, தாம் கலையேயாகி, எழுத்துக்களை வெற்று.வல்லின எழுத்துக்களாகக்