பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

115


காணாமல், அவற்றை, அவற்றால் ஆகிய கவிதையை, அக்கவிதையால் விளங்கும் கவினைப் போற்றிப் புகழ்கின்றார்கள். மற்றவர்களோ, அவை வெற்றெழுத்துக்கள் என்று பேசி வாளா கழிக்கின்றார்கள்.

இனி, இவ்வெழுத்து வழியே கவிதையில் சிறக்கும் மற்றொரு நீலத்தையும் காணலாம்: 'ஒசை உடைமை' என்பது: கவிக்குரிய பத்தழகுகளுள் ஒன்று. தமிழ்நாட்டில் சங்க காலத்திலே சந்தப் பாடல்கள் இல்லை என்பர். அக் காலத்தில் நாம் முன்னமே கண்டபடி வெண்பாவும் அகவலுமே அதிகமாக இழக்கத்தில் இருந்தன என அறிகின்றோம். ஆயினும், நாட்டில் காலப்போக்கில் பல்வகைப்பாடல்கள் தோன்றின. அவற்றின் இலக்கணங்களையும் ஓரளவு மேலே கண்டோம். எப்படியோ காலப்போக்கில் அவை வளர்ந்துவிட்டன. அவற்றிற்கு ஏற்ப இலக்கணங்களும் தோன்றிவிட்டன. நன்னூலார், அந்தக் கவிதைகளை மனத்தில் வைத்து. நூல் பற்றிக் கூறும்போது ‘ஓசை உடைமை’ என ஒன்றையும் அழகாகக் குறிக்கின்றார். ஒசை இனிமை உடையதுதான்; ஒசையின்றேல் உலகமே இல்லை எனலாம். ஒலி வடிவந்தானே வரி வடிவத்திற்கு முதல் இடம். ஆகவே, கவிதைக்கு ஓசை இல்லையானல், சிறவாது தான். ஆனால், பிற்காலக் கவிஞருள் சிலர் இவ்வோசை ஒன்றையே தம் குறிக்கோளாகக் கொண்டு, பொருளையும் பிற பண்புகளையும் மறந்து விட்டதை நினைக்கும்போதுதான் வருத்தமேற்படுகின்றது.

நல்ல சந்தப் பாடல்களில் ஒசை உடைமை நடமாடும் என்பதறிந்தோம். சங்கப் பாடல்களுள் சந்தப் பாடல்கள் இல்லை. ஆனால், அவற்றையும் இசையொடு பொருத்திப் பாட முடியாதா? சிலர் நினைப்பது போன்று சங்க்ப்பாடல்கள் இசையோடு பொருந்தாப் பாடல்கள் என்று எண்ண முடியாது. வெண்பாவும் ஆசிரியமும் இசைக்குட்பட்டனவே. அச்சங்க காலத்து இயற்றமிழாகிய கவிதையிலிருந்துதான் இசையும் நாடகமும் தோன்றலாயின. சங்கத்தைத் தழுவ எழுந்த சிலப்பதிகாரத்தே இசையொடு கலந்த கானல் வரி, வேனில்