பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

கவிதையும் வாழ்க்கையும்


வரி முதலியன சிறந்துள்ளமையைக் காணலாம். பின்னர்க் கடவுள் நெறி சிறக்க வளர்ந்த 'காலத்தில்—தோத்திரப் பாடல்கள் சிறக்க வளர்ந்த காலத்தில்—பல்வேறு வகைப் பாடல்கள் உருப்பெற்றன. இன்னம் காலம் செல்லச் செல்ல, சந்தப்-பாடல்கள் பாடுவதே பெருமை. என்று மதித்தக்கூடிய அளவில் கவிஞர் பெருமை பெறலாயினர்.சிலர் அச்சந்தங்களை நாம் மேலே கண்ட மெய்ப்பாடுகளைக் குறிக்கப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். சிலர் வெறுஞ் சந்தமாகவே பாடிப் பயனற்றுக் கழிந்துவிட்டனர்.

சந்தப் பாடல்களால் சிறந்த காவியம் வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் என்பர். திருப்புகழிலே அதினும், அதிகமான சந்தங்கள் இருப்பதாகக் கூறுவர். கம்பரும் சந்தப் பாடல்களால் தம் கருத்தை ஆங்காங்குக் குறித்துள்ளார். அனைவருக்கும்.முற்பட்ட விருத்தப் பாவால் காவியம் செய்த திருத்தக்க தேவர், சந்தப் பாடல்களால், கவிதையின் ஒட்டத் தையே காட்டுகின்றார்.

இராசமாபுரத்துப் பெருமாளிகையிலே மன்னவர் திருவும் தங்கள் வளநகர் சிறப்பும் பொங்கப் பிறக்க வேண்டிய சீவகன், அந்த ஊர்ப் புறத்திலேயே பலரையும் சுட்டெரிக்கின்ற சுடுகாட்டிலே பிறந்தான் என்பதை எண்ண யார் உள்ளந்தான் வருந்தாது!. புலவர்.உள்ளமும் வருந்திற்று. அந்த வருத்தத்தைக் காட்டப் பாத்திரமாக அமைந்தாள் விசையை தன் முன்னைய வாழ்வையும் அன்றைய தாழ்வையும் அவள் உள்ளம் எண்ணிற்று.


“வெவ்வாய் ஒரி முழவாக
விளிந்தார்.ஈமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட் டுயர் அரங்கின
நிழல்போல் நுடங்கிப் பேயாட
எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கிக்
கூகை குழறிப் பாராட்ட
இவ்வா றாகப் பிறப்பதோ
இதுவோ மன்னர்க்கு இயல்வேந்தே!” (309)