பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

117


என்று அன்று பிறந்த குழந்தையை நோக்கும் உள்ளத்தைத் திறந்து காட்டுகின்றார் அவர். அதில் அச் சந்தந்தான் அவலச் சுவையை எவ்வளவு அழகாக விளக்குகிறது! அடுத்து வீரம் காட்ட விரும்பிய மற்றோரிடத்தில் அவர், வேடர்கள் அம்பு சென்ற விரைவையும், அதை ஏற்ற ஆயர் உடைந்த தோற்றத்தையும்,

பாய மாரிபோல் பகழி சிந்தினார்;

ஆயர் மத்தெறி தயிரின் ஆயினார்;
(421)

என்று சந்தம் பொருந்த விளக்கியுள்ளார். இவ்வாறே இராமாயணத்தும் பிற இலக்கியங்களிலும் பலப்பல சந்தப் பாடல்களைக் காணலாம். இப்பாடல்களால் சாதாரண மக்களுக்குக் கருத்து நன்கு விளங்கு முன்பே. இச் சந்தங்கள் ஓரளவு ஆசிரியர் காட்ட வந்த பொருளை உணர்ந்துகொள்ள உதவுகின்றன. இவ்வாறு எழுத்துக்களையும் சொற்களையும் அமைத்துப் பாடுவது அனைவருக்கும் எளிதான காரியமன்று. எப்படி எளிய பொருளும் கவிஞன் கைப்படின் சிறந்த பொருளாகக் காட்சி அளிக்கின்றதோ அப்படியே சொற்கள் அமைப்பும் கவிஞனுடைய திறமையினாலேயே சிறப்படையும் என்பது திண்ணம்.

சொற்களால் ஆக்கப்படும் கவிதையின் நலனில் ஒன்று அவசியமாகக் காணவேண்டியுள்ளது. சொற்கள் கலந்ததே கவி என்றாலும், அச்சொற்களை அளவறிந்து பெய்து பாடுகின்ற கவிஞர் ஒரு சிலரே! கவிபுனைவதில் மட்டுமின்றிப் பேச்சிலுங் கூடச் சொல்லை அளந்து, அச்சொல்லைப் பிறர் மறுக்கா வகையில் அமைத்து. ஆராய்ந்து சொல்ல வேண்டும் என்பது தான் அறிந்தோர் முடிவு. வெறுஞ்சொற்களும் கவிதைகளில் அமையும்போது நன்கு சிறப்படைகின்றன என்ற உண்மையை 'லையான்' என்ற ஆங்கில நாட்டு ஆய்வாளர் நன்கு விளக்கியுள்ளார்.[1] கவிஞன் கவிதைகளில் சொற்கள் விளையாட்டுப் பொருள்கள் என்கிறார். ஆனால், அவ்விளையாட்டுப் பொருள்களை


  1. The:Discovery of Poetry, by P. H. B. LYON