பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

கவிதையும் வாழ்க்கையும்


அரிதில் முயன்று தேடுபவன் கவியாக மாட்டான். எல்லாச். சொற்களும், என்னை அழைப்பானே! என்னை. அழைப்பானே! என்று அவன் முன் மண்டியிட்டு, வணங்கிக் காத்துக் கிடக்க வேண்டும். அவ்வாறு சொல்லுக்கும் பொருளுக்கும் முட்டுப்படாது, செல்வன் தன் கையால் செல்வத்தை வாரி வழங்குவது போன்று கவிஞன் கவிதைச் செல்வத்தை ‘வையம் பெறுக’ என வாரி வழங்குவதே நல்ல கவிதையின் நலனாகும். இவ்வாறு சொற்களால் ஆயவை கவிதை என்றாலும், எல்லாச் சொல்லும் எதிரே மண்டியிட்டு நின்று காத்துக் கிடந்தாலும், சொற்களை அமைப்பின்றி அழகின்றி அளவின்றிப் பெய்தலும் கவிதை நலத்தைக் கெடுக்கக்கூடும்.

சார்லஸ் வில்லியம்ஸ் என்ற ஆங்கில நாட்டு ஆய்வாளர், ‘கவிதையில் சொற்கள் பல நிறைந்திருந்தாலும் ஒன்றும், பயனற்றதாக இருத்தல் கூடாது.’ என்கிறார், எத்தனை. சொற்கள் இருப்பினும், அத்தனைக்கும் பொருளும். பொருத்தமும் அழகும் அமைவும் இருக்க வேண்டும் என்கிறார். 'அக்கவிதையிலிருந்து ஒரு சொல்லை எடுத்துவிட்டாலும் அக்கவிதையின் பொருளைக்காணமுடியாத வகையில் அமைவதே மெய்க்கவிதை' என்பது அவர் கருத்து.[1] ஆம்; நம் நாட்டுச் சங்க இலக்கியங்கள் அந்த வகையில் சிறந்து நிற்பன அல்லவோ! திருக்குறளின் பெருமைக்கே அதனிடம் அசைச்சொல் அருகியுள்ளமையே காரணமன்றோ நிலத்த பாடல்கள் பல வேடிக்கையாக அமைந்தன போலத் தோன்றும். ஆயிரக் கணக்கான பாடல்களால் ஆக்கப்பெற்ற ஒரு காவியத்தைப் படித்தாலும் இறுதியில், அதில் புரிந்து கொள்வது ஒன்றும் இராது. ஒரு பாடலில் எத்தனை அசைச் சொற்கள் வந்துள்ளன: பொருளற்ற சொற்களைத்தானே அசைச்சொல் என்கின்றோம்: எனவே, நல்ல கவிதையில் பொருளற்ற சொற்கள் இடம் பெறலாமா? ஒரு சொல்லிலே ‘ஆ’வும் "ஒ" வும் அசைகள் என்று


  1. 1. Reason and beauty in the Poetic mind. by CHARLES WILLIAMS.