பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

119


எழுத்துக்களைப் பிரிக்கின்றோம். சில பாடல்களில் சொற்களின், பின் சொற்கள் பொருள் தாரா அசைகளாய் இருக்கின்றன. இவையெல்லாம் நல்ல பாடல்களுக்கு இலக்கணமாகா.

கவிஞன். தன் கருத்தைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் வேண்டும். பின்னர்த் தோன்றிய நன்னூலில், நூலுக்கு இலக்கணம் கூறும்போது இதைத்தான் பத்து அழகில் முதலாவதாக வைத்திருக்கின்றார். ஆகவே, எடுத்த பொருளை, இடர்ப்பாடின்றி, வெற்றுரைகள் இன்றி, சுருக்கமாக, எளிய வகையில் விளங்க வைப்பவனே மெய்க்கவிஞனாவன். அத்தகைய இயற்கை நலன் பொருந்தியதே, கவிதை நலன் வாய்ந்ததுமாகும். நம் நாட்டில் இத்துறையில் திருவள்ளுவர் முதல்வராக எண்ணப்படுவர். அவர் தம் குறளை ஆராய்ந்து, பார்த்த பெரியவர்கள், கடுகைத் துளைத்து ஏழ் கடலைப், புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்றும், அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்: என்றும் கூறியுள்ளார்கள். அணுவையும் கடுகையும் குடைந்து, ஏழ் கடலையும் எவ்வாறு புகட்ட வியலும்! என்று வியப்பும் தோன்றும். ஆனால், வள்ளுவர் அதனினும் சிறந்த ஒரு செயலைத்தான் செய்துள்ளார். அவர் குறளில் பயனற்ற வெற்றுச் சொற்களைக் காணல் இயலுமோ?

குறட்பா, சில சொற்களால், இரண்டு அடிகளால் ஆகிய ஒன்று. அவ்வாறு அமையும் குறட்பாக்களில் அசைச்சொற்களுக்கு இடம் எங்கே? ஒரு சிலர் இரண்டொரு சொற்களை அசைச் சொற்களென்று கருதினாலும், ஆழ்ந்து நோக்கின், அவற்றிற்கும் பொருள்கொள்ளல் இயலுவதாகும். அக்குறளைப் போன்று சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் பொருட் செறிவுடைய் எல்லாப் பாடல்களும் கவிதை நலன் நிறைந்த பாடல்களேயாகும்.

இக்கருத்தை நன்னூலாசிரியர் பவணந்தி முனிவர் நன்கு விளக்குகின்றார். சூத்திரம் என்பது இதுதான் எனத் திட்ட வட்டமாக அவர் பாயிரத்தில் வரையறுக்கின்றார்; ‘சில வகை.