பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கவிதையும் வாழ்க்கையும்


பாரதியார். அதைக் கேட்க, நமக்கெல்லாங்கூட உள்ளம் மகிழ்கின்றது. எடுத்த முத்தைத் தரத்துக்கேற்பப் பிரித்து விலைமதிக்கிருர்கள். அரசியர் தொடங்கி அனைவரும் தத்தம் தகுதிக்கு ஏற்பப் பணம் கொடுத்து முத்துக்களை வாங்கி அணிகின்றார்கள். அதை அணிந்துகொண்டு, அழகுபடுத்திக் கொண்டு வெளியே உலாவுவதிலேதான் அவர்கள் எத்துணைப் பெருமை கொள்ளுகிருர்கள்! ஆனால், அதே வேளையில், அந்த முக்துக்களைக் கடலுள் ஆழ்ந்து குளித்தெடுக்கும் அத் தொழிலாளியைப்பற்றி அவர்கள் எண்ணுவதில்லை. எண்ணத் தேவையும் இல்லையே!

ஆழ்கடலின் அடித்தளத்தில் முத்துக்குளிப்பவன், தன் வாழ்வைப் பொருட்படுத்தாது, வரும் ஊதியத்தால் தன் குடும்பத்தை வாழவைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கோடு, உயிருக்கு மன்றாடிக்கொண்டு படும் அல்லலை எண்ணவும் முடியவில்லையே! ஆம். முத்துக் குளிப்பதும் ஒரு கலைதான்; பிறநாட்டாருக்கெல்லாம் கைவரப்பெருத ஒரு கலைதான்! அம் முத்தும் விலை மதிக்கமுடியாத ஒரு பெரும் பொருள்தான். அதை அணிபவர்களும் தம் உடலையும் அதையும் ஒத்து நோக்கி நோக்கி உள்ளம் பூரிக்கின்ருர்கள். ஆனால், அந்த முத்தை மூழ்கி எடுக்கும் அக்கலைஞனே — முத்துக் குளிப்பவனே எள்ளளவாவது உள்ளத்து இன்பம் கொள்ள முடியுமோ! கடலுக்குள் எந்த நேரத்திலும் காத்திருக்கும் கொடுமைக்கும் அல்லலுக்கும் ஆளாக நேருமே என்று எண்ணி அஞ்ச வேண்டுபவன்தானே அவன் கரைக்கு வந்து சேர்த்தனவற்றையெல்லாம் கொடுத்துவிட்டு, அப்பாடா என்று அண்ணுந்து நோக்கித் தன் , சோர்வைப் போக்கிக்கொள்ளும் அத் தொழிலாளியைப் பார்த்திருக்கிருேமே! ஆம். அவன் தன் வாட்டத்திற்கிடிையே, தான் வாழ்வதற்காகப் பாடுபட்டு, தன் வாட்டத்தையும் மறந்து, மற்றவர்களுக்குத் தன் கைத்திறன்மூலம் மகிழ்வளிக்கின்ருன். ஆனால், கவிஞன் கலை அந்த வகையில் அமைவதன்று: கவிஞன் தானும் மகிழ்ந்து, மற்ருேரையும் மகிழ்விக்க வகை காண்பதே,கவிதையாகும்.