பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை ஒரு கலை

13



கழைக்கூத்தாடியின் கதையைப் போன்றதிதான் சர்க்கஸ் விளையாட்டுக்காரன் கதையும். சிறப்பாகச் சிங்கம் புலி இவற்றைப் பழக்குபவனை எண்ணிப்பார்க்கிவேண்டும். அவன் தன் வயிற்றுப்பிழைப்புக்காகவன்றே அவற்றைப் பழக்கும் ஒரு கலையைச் சாதனமாகக் கொண்டுள்ளான்? சிங்கமும் வெம்புலியும் உறுமும்போதும், சீறும்போதும் அந்த இரும்புக்கூண்டுக்குள் இருக்கும் அவன் உள்ளம் எப்படி இருக்கும்? தூரத்தில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்க்கும் மக்களுக்கே அக்காட்சி கொடுமையுடையதாக இருக்குமே! அதுவும் சிங்கத்தின் வாயில் தன் தலையை விடும்போது அவன் மனம் எவ்வாறு இருக்கும் என்பதை அவனேயன்றி, வேறு யாரால் உணர முடியும்? அவன் முற்றத்துறந்த முனிவனாயின் சரி. புலி வாயும், சிங்கத்தின் வாயும், பூஞ்சோலையும் ஒருவேளை அத் துறவிக்கு அப்போது—அந்தத் துறவு, நெறியின் தூய்மைப் பாதையிலே—ஒன்றாகலாம். ஆனால், அவன் தன் வயிற்றுப் பிழைப்புக்காகவன்றே இந்த விளையாடலை மேற்கொண்டிருக்கிருன்? பார்ப்பவர் கைகொட்டி ஆரவாரிக்கும் போதெல்லாம் அவன் உள்ளத்தில் இன்பத்தேன் பாயுமா? இந்த ஆரவாரத்தில் அமைதியாய் இருக்கும் சிங்கங்கூட ஆர்ப்பரித்து எழினும் எழும். அதை அடக்க வேண்டும் அவன்; பிறகு தன் செயலை மேற்கொள்ள வேண்டும். இந்த நிலையில் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சி பிறப்பதெங்கே? ‘எப்போது விளையாட்டுக்கள் முடியும், வெளியே வரலாம்!' என்றுதானே அவன் உள்ளம் கழியும் நாழிகைகளைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கும்! வேடிக்கை பார்ப்பவர் தம்மை மறந்த நிலையில் ஒருமணி நேரத்தை ஒரு நொடியாக எண்ணின போதிலும், அந்தக் கூண்டில் இருக்கும் அவனுக்கு அது ஒரு யுகமாகவல்லவோ தோன்றும்? அவன் மேலே பார்வைக்குப் பெரிய கோட்டும், அதன்மேல் பதக்கங்களும் அணிந்து, தோற்றமளிப்பினும், உள்ளம் என்ன செய்துகொண்டிருக்கும்? ஆம். அவனைக் காண்போர், அவன் வனவிலங்கை ஆட்டும் சிறப்புக்க்ளைக் கண்டு வியப்போர்—கைகொட்டி ஆரவாரிக்கலாம்; தங்கப்பதக்கங்கள் வழங்கலாம், அவற்றைப் பெறும்போதும், தனது மாத