பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

127



உண்மையாகின்றது! ஆனால், அந்த உண்மை.எதனால் சிறந்து விளங்குகிறது! 'கல்லார் கட்பட்ட திரு .இன்னாது என்றால், அவ்வளவு சிறப்பு உண்டாகாது. அதைச் சொல்லியிருந்தால் வள்ளுவரையும் நாம் போற்ற வேண்டுவதில்லை. ஆனால், அதை அதற்கு நேர் மாறான வறுமையோடு பிணைக்கும். பாலமாகிய உவமையையிட்டு 'நல்லார்கட் பட்ட வறுமையின்' என்று கூறி விளக்கும் குறளே அவரை வாழவைத்தது. அவர் வழி உவமை நலமும், அவ்வுவமை நலத்தின் வழிக் கவிதை நலமும் சிறக்க வாழ்கின்றன. அவ்வுவமையின் நலத்தையும் தொடர்ந்து காண்போம்:

தொல்க்ாப்பியர் பொருளதிகாரத்திலே அகமும் புறமும் அவை பற்றிய பொருளும், அவ்ற்றின் வழி நிகழும் மெய்ப்பாடும் கூறி, அவற்றையெல்லாம் விளக்கும் செய்யுள் இயலுக்குச் செல்லுமுன் எல்லாவற்றிற்கும் இன்றியமையாத 'உவம் இயலை'க் கூறுகின்றார். எப்பொருளும் இவ்வுவமம் இல்வழிச் சிறவாது. அகத்திலும் புறத்திலும் பலப்பல பொருள்கள் உவமை வாயிலாகவே விளக்கப் பெறுகின்றன. எனவே, பொருள்களை விளக்க வரும் கவிதைகளின் இலக்கணமாகிய செய்யுள் இயலைக் குறிக்குமுன் அதற்கு இன்றியமையாது வேண்டப்படும் இவ்வுவம இயலைப் பெய்துவைத்துக் காட்டுகின்றார். நாம் மேலே கண்டபடி பிற்காலத்தில் அணி இலக்கணத்தே எத்தனையோ அலங்காரங்கள் தோன்றின போதிலும், அவை அன்த்தும் தொல்காப்பியுர் கண்ட உவ்மம் ஒன்றிலேயே அடங்கும். அதனாலேயே அவர் உவம இய்ல் ஒன்றை மட்டும் கூறி அமைகின்றார்.

உவமையைப்பற்றி எண்ணும்போது ஆசிரியருக்கு உயர்ந்த எண்ணம் உருவாகின்றது. காணாத பொருளைக் காட்டுவதோ, கற்பனைக் கடலில் மிதப்பதோ, எப்படிப்பட்ட வ்கையிலே உவமம் அமைந்தாலும், அவ்வுவமம் 'உயர்ந்ததன் மேற்றாகவே அமைய வேண்டும் என்கின்றார் அவர். உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை என்பது அவர் வாக்கு. இதற்குப் பேராசிரியர், உவமையெனப் பட்டது'உயர்ந்த பொருள் ஆகல் வேண்டும்'