பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

கவிதையும் வாழ்க்கையும்



நன்மை உண்டாகாது போவது ஒரு புறம் இருக்க, தீமையே பெரும்பாலும் உண்டாவதைக் காண்கின்றோம். இன்றைய உலகத்தில் "நட்க்கும் அத்த னைக் கொடுமைகளுக்கும் கல்லார்கண் செல்வம் சேர்ந்ததுதானே காரணம். செல்வம் என்பது வெறும் பண்த்தை மட்டும் உள்ளடக்கிக் கொண்டதன்று. எல்லாச் செல்வத்தையும் அது குறிக்கும். நாட்டில் போர் விளைக்கும் வல்லரசுகள் தம் செல்வ பலத்தால் தானே கொடுமைகள் இழைக்கின்றன? ஊர்களில் கல்லார் செல்வம் பெறின், அச்செல்வத்தால், சிலர் தாமே உயர்ந்தவர் என்று தருக்கி மற்றவருக்குத் தீங்கிழைக்கும் காட்சியும் நம் நாட்டுக்குப் புதியத்ன்றே! இவ்வாறு செல்வம் கல்லார்கண் சேரின் யாருக்கும் நன்மை உண்டாகாமற் போவதுடன், மற்றவ்ருக்குத் தீமை உண்டாக்குவதில் சிறந்தும் நிற்கின்றது. இதைக் கண்டார் கவிஞர். இதுவும் நல்லார் வறுமையும் அனைவரும் அறிந்தனவே எனினும், அவற்றிற்குப் பாலமிட்டு இணைத்துப் பார்க்கவில்லை. நாம். இரண்டையும் கவிஞர் சீர்தூக்கிப் பார்த்தார். செல்வம் நலம் பயக்கும் ஒன்று என்ற் எண்ணத்தையும், வறுமை துன்பம் தரும் என்ற் நிலையையும் அடியோடு மாற்றிவிட்டார் தம் உவமை கலந்த கவிதை நலத்தினால். அப் புலவர் யார் என்று நினைக்கிறீர்கள்? உலகக் கவிஞர் வள்ளுவரைத் தவிர வேறு யாரால் அவ்வாறு சிறந்த, 'மனத்தில் நீங்காது நிலைத்து நிற்கக்கூடிய மெய்ப்பாலம் அமைக்க முடியும்? அவர் வாக்கு இதுதான்:

'கல்லார்கட் பட்ட வ்றுமையின் இன்னாதே
கல்லார்கட் பட்ட திரு.'

என்னும் குறள் எண்ணிப் பார்க்க வேண்டுவது ஒன்றன்ருே! இக்குறளுக்கு உரையாசிரியர் சிலர் உவமை வழியிலேதான் உரை காண்கின்றன்ர். வேறு வகையில் காண்பாரும் உண்டு. ஆயினும், அவை சிறவா. "திருவினை இன்னாது' என்று நாம் சொன்னால், நம்மைப் பயித்தியக்காரர் என்று பரிகசிப்பர் உலகத்தார். 'பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை' என்ற வள்ளுவர். அப்பொருள் இன்னது என்று கூறும்போது எவ்வளவு