பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

133



டிடுத்திக் காட்டுகின்றார்,இவ்வுள்ளுறை உவமமும், இறைச்சியுமாகிய இரண்டும்,கவிதையின் நலனை மிக உயர்ந்த நிலைக்குத் கொண்டு செல்வனவாகும்.சாதாரணமாக உவமை கவிதையை, எவ்வாறு சிறப்பிக்கின்றது என்பதைக் கண்டோம்.ஆயின் இவ்விரண்டும் கூற வேண்டுவதை வெளிப்புடையாகக் கூறாது, ஆனல் கூற வேண்டுவன அனைத்தையும், விடாது: கவிதை வகையான் விளக்கிக் கூறும் சிறப்பினைப் பெற்றமையின், இவ்விரண்டின் வழிக் கவிதை நலன்மிகமிக உயர்ந்து போற்றப் படும். எனினும், இவ்விரண்டும், தாதாரண உவமைபோல அனைவராலும் பயின்று உடன் துய்த்து மகிழும் வகையில் அமைவன் அல்ல. கவிதை நலனில் தோய்ந்து தோய்ந்து, அவை காட்டும் பொருள் நலன்களையெல்லாம். கண்டு. கண்டு கருத்தால் துய்த்த ஒரு சிலரே இவற்றின் உள்ளுறைப் பொருள்களை 'நன்கு'உண்ர முடியும். சங்ககாலப் புலவர் நன்றாய்ந்த கவிதைப் பண்பாளர்களானமையின் இவற்றைத் தம் காதற் கவிதைகளில் நன்கு பெய்து காட்டியிருக்கின்றனர்.

உள்ளுறை உவம், இறைச்சி என்ற இரண்டிலும் பின்னதை உற்றறிதல் மிகவும் கடினமாகும். இதைத் தொல்காப்பியனாரே சொல்லுகின்றார் உள்ளுறை உவமத்தைக் கூறும்போது, அகத்திணை இயலுள்,

உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத்து உரைப்பது உள்ளுறை உவமம்'

(51)

என்கிறார்

இதற்கு உரை கூற, வந்த நச்சினார்க்கினியர்,தான் புலப்படக் கூறுகின்ற இவ்வுமத்தோடே புலப்படக் கூறாத உவுமிக்கப்புடும் பொருள் ஒத்து முடிவதாகவென்று, புலவன் தன் உள்ளத்தே கருதி,தான்.அங்ஙனம் கருதும், மாத்திரையேயன்றியும், கேட்போர் மனத்தின் கண்ணும் அவ்வாறே நிகழ்வித்து, அங்ஙனம், உணர்த்துதற்கு உறுப்பாகிய சொல்லெல்லாம் நிறையக் கொண்டு முடிவது, உள்ளுறை என்றவாறு என விளக்குகின்றார். அதாவது, கவிஞன் தான்