பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

கவிதையும் வாழ்க்கையும்


 காட்ட வந்ததை வேறாகக்காட்டாது. வேற்று உவமவாயிலான் உவமானப் பொருளை மட்டும் கூறி, அதன் வழித் தான் உவமிக்க நினைத்த-பொருளைக் கேட்போன் அறிந்துகொள்ளும் வகையில் கவிதை இசைப்பதாகும். ஆகவே, ஒருவகையில் கேட்பவருக்கு இவ்வுள்ளுறை உவமம் புலனாகும். ஆனல், இறைச்சியோ அத்தகையதன்று, அப்பொருளையே விளக்க உவமமுகத்தான் வருவதாயினும் இறைச்சிப் பொருள் கூற வேண்டிய பொருளின் புறத்தே நின்று அந்த்ப் பொருளை விளக்க நிற்பதாகும். உள்ளுறை உவமத்தை உணர்ந்து கொள்கின்ற அந்த அளவு. கவிதையில் வரும் இறைச்சியை அனைவராலும் எளிதில் உணர்ந்து கொள்ள இயலாது: இதைத்தான் தொல்காப்பியர்,

இறைச்சியில் பிறக்கும் பொருளுமா ருளவுே
திறத்தியல் மருங்கின் தெரியூ மோர்க்கே'

(பொ.35)

என்கிறார். திணை நிலத்துக்கு உரிய கருப்பொருள்கள் மேற்கண்ட உள்ளுறை உவமத்தாலும் வெளிப்படை உவமத்தாலும் கண்ட பொருளை விளக்குவதேயன்றி, அக் கருப்பொருள்கள் தம்முள்ளே தனித்து நின்று விளக்கும் பொருள்களும் உளவாம்: அப் பொருள்களே இறைச்சிப் பொருள்களாம். அவை தோன்றும் போது உள்ளுறை உவமம் போன்று இருக்கும். ஆனால் ஆராய்ந்து நோக்குவாருக்கு அவை உள்ளுறையன்று; இறைச்சியே என்பது புலனாகும் என்று விளக்குகின்றார் நச்சினர்க்கினியர். ஆம்! இறைச்சி, உள்ளுறை போன்று இருப்பினும், அதற்குள்ளேயே உரிய பொருளைக் கொண்டு காட்டும் தன்மையது. இரண்டையும் அவர் காட்டிய மேற்கோள்கள் மூலமாகவே நன்கு விளக்கலாம் என எண்ணுகின்றேன். பின்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக் உவமம், உள்ளுறை உவம்ம், இறைச்சி என்ற மூன்றனயும் காண்போம். இவ்வாறு க்வின்த நலம் சிறப்புற்று ஓங்குவதற்கு உவமை வெளிப்படையாகவும், உள்ளுறையாகவும் வந்து உதவுவதோடு, கருப்பொருளே பொருளாயமைந்த இறைச்சியாகவும் நின்று. ஒரு சிறந்த கவிதையின் சாதனமாய் இருக்கிறதென்பதைச்