பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

135



சங்ககாலம் தொடங்கி இன்றள்வும் தோன்றி வாழ்கின்ற் இலக்கியங்கள்-கவிதைகள்-கற்பனைக் கோவில்கள் விளக்கிக், காட்டுகின்றன.

கவின்தக்குச் சிறந்த அணிகலனாகிய இந்த உவமையைப் பிற்காலத்தோர் சிதைக்கத் தொடங்கி விட்டனர். அந்தச் சிதைவுதான் நாம் மேலே கண்ட அணி இலக்கணமாக உருப்பெற்றுள்ளது. ஆனால், ஆய்ந்து நோக்கின், அவை அன்த்தும் உவமையுள் அடங்கும். உவமையை ஒட்டி உண்டான அதன் முதற் சிதைவுதான் 'உருவகம்' என்பது. உருவகம் உவமையிலிருந்து தோன்றிய ஒன்றினாலும், தொல்காப்பியத்தில் கூறப்படாத ஒன்றானாலும், அதுவும் இன்று கவிதை உலகில் ஆட்சி செலுத்துகின்றது. அதுவும் கவிதிையை அழகுபடுத்தும் ஒரு பூணாகிவிட்டது. தமிழ்க் கவின்த உலகில் மட்டும்ன்றி ஆங்கில்ம் முதலிய பல்வேறு மொழிக் கவின்தகளிலும் அவ்வுருவகம் நிலைத்த இடம் பெற்றுவிட்ட்து.அதன் அழகும் ஒரு தனிப்பட்ட வகையில் அமைந்துள்ளது. உவமையைப் போன்று நிறைந்த ஆதிக்கத்தைக் கவிதை உலகில் அது செலுத்தவில்லை என்றாலும், இன்று நம் கண்முன் காணும் கவிதை உலகில் உவமைக்கு அடுத்த நிலையில் உருவகத்தின் ஆதிக்கமும் உண்டு என்பதை மறுப்பார் யார்? ஆம்! அந்த உருவகம் என்பது என்ன்? உவம்ையை உணர்வார்க்கு உருவகம் புதிதன்று என்பது காணலாம். உருவகம் என்பதும் ஒரு வகையில் உவமையேயாகும், உருவகத்தைப் பற்றிக் கூற் வருகின்ற தண்டி அலங்காரம்

'உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்.'

என்கின்றது. உவமையில் வரும் இரண்டு பொருள்களும் தம்முள் வேறுபாடு இன்றி நிற்பனவே என்பது அவர் கருத்து: அங்கு உவமையில் இரு பொருளுக்கும் இடையில் பால்ம். அமைத்தார்கள்; ஆனால், இங்கோ.இரண்டையுமே பின்னிப் பிணைக்கின்றார்கள். எவ்வாறு பிணைப்பது? உவமை அணிக்குப் 'போல' முதலிய உருபுகள் இடையில் வருகின்றன. ஒரு