பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

கவிதையும் வாழ்க்கையும்



பொருளை எடுத்து விளக்கும்போது, 'அது இதைப் போன்று. இருக்கும், ' என்று வேறொரு பொருளால். விளக்குவது உவமை. உருவகத்தில் அந்தப் பொருள் தானே ஆகிவிடுகின்றது. மகளிர் முகத்திற்குத், தாமரையை உவமையாகச் சொல்வது மரபு. மதி போன்ற முகம், மதி யன்ன, முகம் என்ற தொடர்கள் உவமை பற்றியன. இங்கே மதி வேறு. முகம் வேறு. இரண்டிலும், போன்ற, அன்ன என்னும் உவம உருபுகள் முதற்பொருளுக்குச் சிறப்புத் தருகின்றன. மதி போன்ற் முகம் என்னும்போது அதனால், சிறப்படைவது முகமேயன்றி, மதியன்று. உருவகத்தும் அதுே. நிலைதான்; சிறப்படைவது எடுத்துக் கொண்ட முகம் என்னும், பொருளேயாம். ஆனால், இங்கே உவம உருபுகள் இல்லை: மதி வேறு,முகம் வேறு என்ற பிரிவும் இல்லை. இரண்டையும், ஒன்று சேர்த்து'முகமதி' என்று கூறுவார்கள், 'இது,எப்படிப், பொருந்தும்? உவமையாவது ஒர் அளவு ஒப்புமைப்படுத்திக் கூறும்போது, சரியாகின்றது. இங்கே முகத்தையே, மதியாக்குவது சற்றும், பொருத்த்மல்லவே! என்று கூறத் தோன்றும். அதனாலேதான் தொல்காப்பியர் இதுபற்றிக் கூறாதுவிட்டனரோ என எண்ண வேண்டியுள்ள்து. எனினும், உவமையைப் போன்று இந்த உருவகமும் ஓர் அளவுக்குத் கவிதை நலனுக்கு உறு துணையாகின்றது. "மதி போன்ற முகம் என்பதிலும் 'முக மதி' என்பது இலக்கியத்தில் ஒர் ஏற்றம் பெற்றதாகத்தான் உள்ளது என்ப்ர். "முகத்தையே. சந்திரனாக, உருவகம் செய்தால், சந்திரனிடத்துள்ள தண்ணளி. நிறைமதியின் வட்டநிலை, பிற நல்லியல்புகள் அனைத்தும் முகத்துக்கும் பொருந்து மன்றோ? ஆகவே, முகம் தன் நிலையினின்று சற்று உயர்ந்து காணப்படுகிறது. உவமை யேற்கும் யொருளைக்காட்டிலும் உவமை எப்போதும் சற்று உயர்ந்த பொருளாகவே இருக்கும் என அறிகின்றமையின், அவ்வுயர்ந்த பொருளின் பண்புகள் சில, உவமையின் மூலம், அப்பொருளுக்கும் வரலாம். ஆனால், தானே அதுவாக மாறும், உருவகமாயின் அவ்வுயர்பொருள்நலம் அனைத்துமே இதற்கும் பொருந்துவனவாகாவோ! அதனால், அவ்வுருவகம் இலக்கிய