பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கவிதையும் வாழ்க்கையும்


வாய்க் கழிந்தொழிந்திருப்பதைக் காலத்தேவன் நம் கண்முன் காட்டிக்கொண்டேயிருக்கிறான் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. தனக்காகவும், மற்றவர்தம் கட்டாயத்துக்காகவும் கவிஞன் கவி பாடவில்லை என்றால், பின்பு கவிதைதான்,எப்படி உருவாகிறது? ஏன் உருவாகிறது? இதை எண்ணிப் பார்க்கத் தான் வேண்டும்.

‘காரிகை கற்றுக் கவி பாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே’, என்றார் ஒரு பிற்காலப் புலவர். பாவம்! கவி இயற்றுவதில் அவர் பட்ட அல்லலும் அவதியும் ஒருவேளை இவ்வடிகளாக உருப்பெற்றிருக்கலாம். ஆம். கவி பாடுவது அவ்வளவு எளிதன்றுதான். கவி பாடுதலுக்கு வேண்டிய இலக்கணங்களை வகுத்துத்தரும் நூல் ‘காரிகை’ எனப்படுகிறது. ‘யாப்பு’ என்பது யாத்தல், கட்டுதல் என்ற பொருள்களில் வழங்குவது, சொற்களைக்கொண்டு ஒரு கட்டு அல்லது பாடலை அமைப்பல்தயே ‘யாப்பு’ என்று குறித்துள்ளார்கள். அந்த யாத்தல் இலக்கணத்தை விளக்க வரும் நூலே ‘யாப்பருங்கலக் காரிகை’ என்று பெயர் பெற்றது. ‘யாப்பருங்கல. விருத்தி’ என்னும் ஒரு நூலும் உண்டு. இவற்றுள் எழுத்துத் தொடங்கி உறுப்புக்களின் அமைப்பையும் பிறவற்றையும் கூறி, பின்னர்ப் பாடல் இயற்றுவதைப் பற்றிய விளக்கங்களும் கூறுவர். இந்தக் காரிகையைப் படித்தால்தான் பாடல் இயற்ற முடியும் என்று எண்ணுகின்றனர் சிலர். அந்த எண்ணத்தின் அடிப்படையில் எழுந்ததுதான் மேற்கண்ட அத் தொடர். காரிகையின் இலக்கணங்களைக் கற்று, அதன்படி ஒருவன் பாடல் எழுதத் தொடங்குவானாயின், அது மிக எளிய காரியமாகாது என்பது உண்மைதான். அப்படியாயின், ஏன் அதற்கென இலக்கண வரம்பினை உண்டாக்கி வைத்தார்கள்? அதன்படி பாட முடியாதென்றால், அந்த நூல்தான் எதற்கு? இத்தகைய கேள்விகள் எழுதல் இயல்பு அன்ருே எனினும், ஆய்ந்துணர்ந்து பார்த்தால் இக்கேள்விகளுக்குப் பொருள் இல்லை என்பது புலகுைம்.

தமிழ் நாட்டுப் பழைய இலக்கணம் தொல்காப்பியம் என்பது. அதில் கவிதை பற்றிய ஒரு பகுதி உண்டு. ‘செய்யுள்