பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை ஒரு கலை

17


இயல்’ என்று அப்பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்த யாப்புப் பற்றிய இலக்கணமும் குறிக்கப் பெற்றுள்ளது. யாப்புக்கு அங்கமாக அமைய வேண்டிய எழுத்து, அசை, சீர் முதலியவற்றை அது விளக்குகின்றது. அந்த அங்கங்களால் ஆக்கப்படுவதற்கே யாப்பு என்பது பெயர் என அது முடிவு கட்டவில்லை. அதற்கு மேலும் ஒன்றிலே சென்றுதான் யாப்பு நிறைவுறுகின்றது. அது என்ன?

‘பொன் மலர் நாற்றமுடைத்து’ என்று உவமைக்காகப் புலவர்கள் பாடியிருப்பதை நாம் அறிவோம். இயற்கையில் அரும்பும் மணம் நிறைந்த மலரை நாம் காண்கின்றோம். கலைஞன் கைவண்ணத் திறனையெல்லாம் பெய்து கண்டோர் வியக்கும் வண்ணம் பொன்னல் அதேவகையான வண்ண மலரைச் செய்வதையும் காண்கின்றோம். என்னதான் பொன்னாலானதாயினும், இயற்கை மணம் நிறைந்த மலரிடம் மக்கள் கொண்டுள்ள ஈடுபாடு அப் பொன்மலரிடம் கொள்வதில்லை. ஏன்? பொன்மலர் எவ்வளவு அழகாக—கலைஞன் கற்பனைக்கு இருப்பிடமாக—இருப்பினும், அதற்கு இயல்பான மணம் இல்லாததே அது சிறப்படையாததற்குக் காரணம். அதே நிலையைத்தான் கவிக்கும் ஏற்றிக் காட்டுகின்றார் ஆசிரியர் தொல்காப்பியனர். வெறுஞ் சொல்லும், அசையும், சீரும், தொடையும், அடியும் கொண்டு ஆக்கும் அனைத்தும் ஆக்கப்படுவன ஆகா: யாத்தல் என்னும் பெயரைப் பெற்றனவாகா: சிறப்பாகக் கவிதை அல்லது பாட்டு என்னும் பயன் தருவன ஆகமுடியாது என்று திட்ட்மாகக் கூறுகின்ருர் அவர். அவையாவும் யாப்புக்கு இன்றியமையாத உறுப்புக்களே. எனினும், உயிரற்ற உடலில் எல்லா உறுப்புக்களும் அமைந்திருப்பினும் அவற்ருல் பயனில்லையன்றோ! பொன் மலரர்யினும், நாற்ற மின்றேல் சிறப்பில்லையன்றோ! அதுபோன்றே அந்த யாப்பின் உயிராக அமையும் பொருள் அமையவேண்டிய் வகையில் அமையாவிடின், அதற்குச் சிறப்பு இல்லை என்று திட்டமாகக் கூறுகின்றார். ஏதோ எழுத்தையும் சொல்லையும் அடுக்கிப் பாடுபவன் கவிஞனாக முடியாது. அவற்றுடன் தான் கூற