பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணும் விண்ணும்

163


 - நாம் வாழும் மண்ணில் விண்ணைக் காண்கின்றோம். கடல் நீரும் பிறநீரும் நம்மைச் சூழ்ந்துள்ளன. காற்று வீசுகின்றது. நெருப்பும் சுற்றியுள்ளது. இப்படிப் பல ப்ொருள்கள்-ஏன்-திட்டமாகவே ஐந்து, பொருள்கள் நம்மிடையே காணப்படுவன. இவற்றுள் வானாகிய விண் தோற்றமற்றது. காற்று, தோற்றமற்ற ஒன்றாயினும், உற்றறியத் தகும் தன்மையுடையது உடல்மேல் படும் மென்மையும் இனிமையும் கொண்டு நாம் காற்றின் உண்மையை அறிகின்றாம். இனி நெருப்பையும், நீரையும், நிலத்தையும் நாம் கண்ணாலேயே காண்கின்றாம். இவ்வைந்தும் கலந்ததுதான் நம் வாழ்க்கை, நம் உடல்-நம் செல்வம்-நம் உலகம்-ஏன்-அண்டமுகடுங் கூட-இவ்வைந்தால் ஆக்கப்பட்டனவே!

'நிலம்நீர் தீவளி விசும்பொ டைந்தும்
கலந்த மயக்கம்இவ்வுலகம்.

(தொல், மரபு. 86)

என்ற தொல்காப்பியம் இவ்வுண்மையை நமக்கு உணர்த்துகின்றது. எனவே, இவ்வைந்தும்ே அனைத்துக்கும் அடிப்படையாகின்றன. விண்ணிலிருந்து மண் வருகின்றது. அவற்றிற்கிடையில் மூன்று பிற பொருள்கள் வருகின்றன. இவ்வைந்தையும் வட நூலார் பஞ்ச பூதம் என்பர். உலகமே இவ் வைம்பூதச் சேர்க்கைதான்.

மேலை நாடுகளில் இதுபற்றிய ஆராய்ச்சியும் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. பெரும்பாலும் மிகு பழங்கால இலக்கியங்களை ஒட்டியேதான் அவர்தம் ஆராய்ச்சிகளும் தத்தம் முடிவைத் தருகின்றன. மேல் கண்டபடி ஆய்வுக் களங்கள்,தம் ஆராய்ச்சியின் முடிவினை இன்னும் எட்டவில்லை. எட்டுமா என்பது திட்டமாகக் கூறவும் முடியாது. எப்படிக் காலமும் எல்லையும் அவர் கருத்தில் திட்டமாக வரையறுக்கப் படாது வளர்ந்து கொண்டே போகின்றனவோ, அப்படியே தோற்ற முறையும் சென்று கொண்டேதான் இருக்கின்றது. எனினும், ஓரளவில் அவர்கள் உண்மையையும் கண்டு உலகுக்கு உணர்த்திக் கொண்டேதான் இருக்கின்றர்கள்...சாதாரண மான ஒன்றைக் காணலாம். .