பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணும் விண்ணும்

165


 திறம்பட முடிக்கவில்லையாயினும், அத்திசையை நோக்கித். தான் அது சென்று கொண்டிருக்கிறதென்பது மட்டும் புல்னாகின்றது. வெட்ட வெளியாகிய விண் இல்லாத இடமேயில்லை. இதைச் சமயத் தலைவர்கள் வெட்ட வெளி, பாழிடம், கேவல நிலை என்றெல்லாம் அவரவர் நெறிக்கேற்பச் சொல்லுவார்கள். அவர்கள் கருத்தெல்லாம் முடிவில் உலகும், உயிரும், பிறவும் அவ்வெட்ட வெளியைச் சார வேண்டும் என்பதே சமயக் கருத்து இங்கு நமக்கு வேண்டா விஞ்ஞானத்தின் விளைவும் அக் கருத்தையேதான் பெரும்பாலும் சார்ந்து செல்கின்றது. மேலே நீர், காற்றாகப் பிரிக்கப்படுவதை கண்டோம். மற்ருென்று காண்போம். " . ;

இவ்வுலக உருண்டை சூரியனிடமிருந்து சிதறிய ஒரு பொறி என்று விஞ்ஞானிகள் கூறியதை மேலே கண்டோம். அப்படியே நோக்கின், இவ்வுலகம் நெருப்பு உருண்டையாகத் தானே இருக்க வேண்டும்? ஆம்; இருக்கிறது. அந்த நெருப்பு இன்னும் அவிந்துவிடவில்லை. ஆழம் தோண்டத் தோண்ட, அது வாழ்வதைக் காண்கின்றோம். ஆனால், அந்த நெருப்புருண்டையிலிருந்து பரந்த கடல் நீரும், விரிந்த நிலபரப்பும் எப்படி வந்தன? அதைத்தான் விஞ்ஞானிகள் ஆய்கின்றார்கள்: ஓரளவு முடிவும் கண்டுள்ளார்கள். நம் நாட்டுக் கவிதை பாடிய புலவர்கள் ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்னமே கண்ட முடிவுதான் அது. அப்படி என்ன முடிவு, கண்டு விட்டார்கள் அப் பழம்பெருங் கவிஞர்கள்?

முதலில் விண் எங்கும் பரந்திருந்தது. அதை ஒட்டி நெடுங்காலம் சென்று அதனுள்ளிருந்து. காற்றுத் தோன்றிற்று -பிறகு நெருப்பு: பிறகு நீர்; இறுதியில் நிலம். இந்த ஐம்பூதங்களும் இவ்வாறு பிறந்தன என்பர். எனவே விண்ணில் அவ் விண்ணாகிய பொருள் மட்டும்; இருந்தது. அதனுள், பிறந்த காற்றிலே விண், காற்று என்ற இரு பொருள்களும் அடங்கி யிருக்கின்றன: நெருப்பில் விண்ணும், காற்றும் நெருப்பும் அடங்கும். நீரில் அப்படியே நான்கு பொருள்களும், நிலத்தில் ஐந்து பொருள்களும் அடங்குகின்றன. இதை இன்றைய