பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

கவிதையும் வாழ்க்கையும்


 விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டு ஓரளவு ஒத்துக் கொள்ளுகின்றார்க்ள் விண் ஒன்றினைத் தவிர்த்து. மற்றவற்றின் நிலையை அவர்கள் இவ்வாறு அறுதியிடுகிறார்கள் எனலாம். அவர்தம் ஆய்வு மேலும் செல்லின், இம்முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கும். இந்தப் பேருண்மையைத்தான் மாணிக்கவாசகர், -

"பாரிடை ஐந்தாய்ப்பரந்தாய் போற்றி!
நீரிடை நான்காய் திகழ்ந்தாய் போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!”

என்று இறைவன்மேல் ஏற்றிக் கூறுகின்றார். கடவுள் தன்மை பற்றி அவ்ர் காட்டுவதாயினும், அதில் எத்துணை விஞ்ஞானக் கருத்துக்கள் அமைந்துள்ளன என்பதையே நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

இவ் வைந்தின் தொடர்பும் தோற்றமும் விஞ்ஞானிகளது முடிவில் இன்னும் திட்டமாக விரையறுக்கப்படா விடினும், அவ்ர் கண்ட ஒருசில முடிவுகள் வழியே மற்றவையும் சரியெனக் கொண்டு மேலே செல்லலாம். 'ஐம்பூதச் சேர்க்கையே உலகம் என்றால் அவை என்று சேர்ந்தன? ஏன் சேர்ந்தன? இவற்றிற்கெல்லாம் நம்மால் பதில் கூற முடியாது. விஞ்ஞானிகளின் ஆய்வுக்களங்கள் ஓரளவு பதில் கூறும் என்பது உண்மை. அவை பற்றி நாம் இங்கே ப்தில்களைத் தேடிக் கொண்டிருக்கத் தேவை இல்லை. நம் வாழ்வுக்கமைந்த இவ்வுலகத் தோற்றத்தை ஒருவாறு அறிந்து கொள்வதே நம் நோக்கமாகும்.

இவ்வுலகத் தோற்ற்த்துக்கும் முதல் ஊழியாகிய விண்ணின் தோற்றத்துக்கும் இடையே எத்தனை எத்தனை கோடி ஆண்டுகளோ கழிந்திருக்க வேண்டும்; எத்தனை எத்தனை ஊழிகளோ நடைபெற்றிருக்கும். அவற்றின் தொலை ஆண்டுக்ளையும் விஞ்ஞானிகள் ஆராய இருக்கின்றார்கள். நம் நாட்டில் பழங்காலத்து வாழ்ந்த புலவர் ஒருவர், இக்காலத்தின் இடைப் பட்ட எல்லையை ஆராய முற்பட்டிருக்கிறார் என்றாலும்,