பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணும் விண்ணும்

167


 அவரால் முடியாது, ஏதோ ஒரு வரம்பு கட்டியதோடு, நின்றிருக்கின்றார். ஆனல், அவர் ஆய்வும் கடவுளைப்பற்றியே செல்கின்றது. நாட்டில் பலர் கடவுள் வழியே தம் கவிதைகளை ஆக்க முன்னின்றதால், அனைத்தையும் அக் கடவுளைப்பற்றியனவாகவே பாராட்டியுள்ளனர். இவ்வுண்மை மேலே கண்ட தொல்காப்பியத்தும் கூறப்பட்டுள்ளது. இவ்ர் மண்ணில் 'நிலம் நீர் தீ வளி விசும்பு' ஐந்தும் கலந்துள்ளதென்கின்றார். ஆனல், அவை கலந்த நாளை அறுதியிட முடியவில்லை. இன்றைய ஆய்வாளர் நிலையும் அதுவே. ஆயினும், சங்ககாலத்தை ஒட்டி வாழ்ந்த கீரந்தையார் என்னும் புலவர், ஒருவாறு விண்ணிலிருந்து இம்மண் வந்த வரலாற்றைத் தொகுத்துக் கூறுகின்றார். அவர் கூற்றே பரிபாடலில் இரண்டாம் பாடலாய் அமைந் துள்ளது. அதில் அவர் பேசும் கருத்தை முன்னே காண்போம்.

பழமையான இயற்கை நியதியின் கட்டளைக்கு உட்பட்டு நம் கண்முன் காட்சியளிக்கும் தோற்றங்கள்.மாறி, மாறி, வருவன. எத்தனையோ உலகங்கள்-எத்தனையோ சூரியர்கள்-எத்தனையோ.. சந்திரர்கள்-மாறி மாறித் தோன்றியும் பிறழ்ந்தும் மறைந்து கொண்டேயிருக்கின்றனர். இயற்கை ஒரே நிலையில் அமைதியாய் இருப்பதில்லை. தோற்றமும் மாற்றமும் மறைவும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால், மறைவு என்பது அழிதலாகாது. ஒன்று மற்றொன்றாக மாறுவதே அது. விசும்பில் விளைந்த மண்ணும் மதியும் ஞாயிறும் பிறவும் மறுபடியும் விசும்பாவதுதான் மறைவென்னும் மாற்றம். இப்படிப்பட்ட மாற்றங்கள் எத்தனையோ முறை எத்தனையோ வகையில் நடந்துகொண்டே யிருக்கின்றன. அப்படி நிலை கெட்ட்பின் முதலாவதாக அமைவது விசும்பு என்னும் விண்ணாகிய வெட்டவெளியின் நிலையே. இந்த விசும்பு நிலை எத்தனையோ கோடி யாண்டுகள் அப்படியே கிடக்கும். பிறகு இந்த விசும்பு, முறையே காற்று முதலிய பூதங்கள் தோற்றுவதற்காக வானமென்று நம் கட்புலனாகியும் காணாத ஒன்றான ஓர் ஊழியை உண்டாக்குகின்றது. பின்பு அந்த வான 'ஊழி கழிந்த நெடுநாளுக்குப் பிறகு அவ்வானிலிருந்து வளி