பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

கவிதையும் வாழ்க்கையும்


 என்னும் காற்றின் ஊழி பிறக்கிறது. ஊழி என்பது எல்லை, அறுக்கப்படாத ஒரு நெடுங்காலத்தைக் குறிக்கும் ஒரு சொல். பின்பு அக் காற்று ஊழியிலிருந்து கனல் பிறக்கின்றது. அவ்வூழியில் நெடுங்காலம் கழிந்தபின் பணியும் மழையும் வெள்ளமும் கலந்து நின்ற நீர் ஊழி பிறக்கின்றது. எல்லாவற்றிற்கும் இறுதியிலே-நெடுங்காலம் கடந்தபின்-முன் கூறிய எல்லாவ்ற்றையும் தன் உள்ளேயே அடக்குகின்ற-விண்; காற்று, தீ, நீர் அனைத்தையும் உட்கொண்ட-இந்நிலமாகிய ஒரு பேருழி பிறக்கின்றது. இப்பிறந்த நில ஊழிக் காலத்து நெடுவர்ழ் நாளில் நம் நாள் ஒரு நொடி. இவ்வாறு ஊழி தோறுழி கழிய உண்டான காலமோ, இன்ன அளவிற்று என்று கண்க்கிட்டு வரையறுக்க முடியாதது! ஆம்! குவளை, சங்கம், கமலம் போன்று சிந்தையால் கணிக்கமுடியாத பல பேரெண் கூட்டங்களின் எண்ணிக்கையைக் கடந்து நிற்பதாகும். 'இதுவே உலகம் தோன்றிய வழிமுறை,’ என்பது அக் கீரந்தையார் கருத்து. இனி இதனை அவர் வாக்கிலேயே காண்பேர்ம்י.

"தொன்முறை இயற்கையின் மதியொ...

..................மரபிற்றாக
பசும்பொன் உல்கமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் வழி ஊழ்ஊழ் செல்லக்
கருவளர் வானத் திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்:
முந்துவளி கிளர்ந்த ஊழுழ் ஊழியும்:
செந்தீச் சுடரிய ஊழியும், பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு'
மீண்டும் பீடுஉயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீ டாகிய இருநிலத் தூழியும்;
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய்குறியீட்டம் கழிப்பிய வழிமுறை"

(2-ஆம் பாட்டு, அடி, 1-15)