பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணும் விண்ணும்

169



என்று கீர்ந்தையார் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகிளுக்கு முன்னரே இவ்வுலகத் தோற்றத்தைப் பற்றி இவ்வாறு பாடியிருப்பாராயின், இதைப் பாராட்ட்டாதிருக்க முடியுங்கொல்!. இவ்வாறு நாம் நமது வாழ்க்கையைப்பற்றி ஆராய்வதன்முன் நாம் வாழும் உலகத்தைப் பற்றியும், இவ்வுலகம் தோன்றிய வரலாற்றைப் பற்றியும், ஒரளவு அறிந்துகொள்ளுதல் இயல்புடைத்தே என, இவ்வளவையும் காட்ட விரும்பினேன். இவற்றுள் பல இன்றைய விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப் படுவதையும் கண்டோம். காணாது குறைபட நிற்பனவும், இறுதியில் நிறைவுற்று இத்தகைய முடிவுக்குத்தான் வந்தாக வேண்டும்.

எவ்வாறாயினும், நாம் வாழும் உலகம் பரந்த அண்ட் கோளத்தில் மிகமிகச் சிறியதாயிருக்கும் ஒரு சிறு திவலையென்ற உண்மையும், அந்த உல்கில் நாம் வாழும் வாணாள், அண்டகோள ஆயுட்காலத்தில் மிகமிகக் குறுகிய எல்லையாகிய ஒரு சிறு நொடியென்பதும் மறுக்கமுடியாத உண்மைகளே யாகும். இவ்வுண்மைகளை யெல்லாம் உய்த்து உணர்தல் அவ்வளவு எளிதன்று. விஞ்ஞானத்தின் வழியே கண்டாலல்லது இவற்றை இன்றைய உலகத்தார் உண்மையெனக் கொள்ள் மாட்டார். அறிஞர்களும் இவற்றுள் பலவற்றை ஆராய்ந்து கொண்டே வருகிறார்கள். நாம், இனி அவர்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு, நம் உலகத்துக்கு வருவோம்.

வாழ்க்கைக்கு இருப்பிடமாகிய உலகைக் காண அவ்வளவு நெடுந்துாரம் முன்னே செல்ல வேண்டியிருந்தது. இவ்வுலகம் இப்படி எங்கிருந்தோ தோன்றிய ஒன்று என்றாலும், இதில் இன்றைக்கு இருநூறு கோடி மக்களுக்குமேல் வாழ்கின்றார்கள்: பல கோடி உயிர்கள் வாழ்கின்றன. இனி, அவற்றின் தோற்ற வளர்ச்சிகளையும், அவை வாழும் முறை வழிகளையும் தொடர்ந்து காணின், வாழ்க்கையைப் பற்றி ஒருவாறு உணர்ந்தவராவோம். தொடர்ந்து இந் நில உலகத்தில் உயிர் தோன்றி வளர்ந்த வரலாற்றைக் காண்போம்:

க. வா.-11