பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

கவிதையும் வாழ்க்கையும்



ஆண், பெண் வேறுபாடுகளைக் கண்டவர்கள் தமிழர்கள். இவ்வுயிர்களின் அமைப்பைப் பற்றித் தொல்காப்பியனார் மற்றேரிடத்தில் விளக்கமாகக் கூறுவது நோக்கத் தக்கதாகும்.

உயிர் வளர்ச்சி அடைய அடைய, அதன் அ றிவும் வளர்ச்சி அடைகின்றதென்பது அறிவுடையோர் கொள்கை. உயிர் நிலத்தில் தோன்றுமுன் நீரில் தோன்றியிருக்க வேண்டுமென்பதும் அவர் துணிபு. நிலம், நீர் தோன்றி நெடுங்காலத்துக்குப் பிறகே ஆனமையின், அவர் கூற்றும் பொருந்துவதாகும். உயிர் அணுக்கள் எப்போது தோன்றின என்பதைத் திட்டமாக வரையறுத்துக் காட்ட இயலாவிட்டாலும், திண்ணிய உடலோடு உயிர் இயையும் முன்னமே உயிர் அணுக்கள் உலகெங்கணும் நிறைந்து நின்றிருக்கவேண்டும் என்பர் ஆராய்ச்சியாளர். இந்த உண்மையைச் சமய நூலும் ஓரள்வு ஒத்துக்கொள்ளுகிறது. அனைத்தையும் உண்டாக்கிக் காக்கும் ஆண்டவனாக ஒருவனை நிறுத்தி, அவன் முதலும் ஈறும் அற்றவன் என்று கூறும் சமயங்கள், அச் சமயத்துறையிலே இறைவன் என்று உள்ளானோ அன்றே அடிமையாகிய உயிரும் உண்டு என்று கூறும். 'என்று நீ அன்று நான்' எனத் தாயுமானவர் இறைவனிடம் பேசியதாக வரும் அடி, இதுபற்றி எழுந்த ஒன்றேயாகும். தமிழ் நாட்டில். வாழும் சைவ சித்தாந்தக் கொள்கையும் இவ்வுண்மையையே வலியுறுத்துகின்றது. உலகம், உயிர், கடவுள் என்ற மூன்றும் அழியா நிலையினவே என்பது முப்பொருள் உண்மை என்பதாகிய அச் சித்தாந்தம். அழிவில்லை என்றால், மாற்றமில்லை என்பது பொருளன்று. பொருள் மாறும்; ஒன்று மற்றொன்றாகும்: ஆனால், அது அழிவதில்லை. இரசாயன சாத்திரத்தில் இந்த உண்மையை ஆய்வுக்களத்தின்மூலம் நன்கு விளக்குகின்றார்கள் இன்றைய விஞ்ஞானிகள். விலை கொடுத்து வாங்கி வந்து வைத்த ஒரு மெழுகுவர்த்தி பற்றி எரிகின்றது. அனைத்தும் தீர்ந்துவிடுகின்றது. பணம் கொடுத்து வாங்கிய பாமரன் அதன் விலையாகிய இரண்டணாவோ ஒர் அணாவோ கெட்டு விட்டது என்று கூறுவான். ஆனால், இரசாயன ஆராய்ச்சி