பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

கவிதையும் வாழ்க்கையும்



களைப் பார்க்கும் நமக்கு, இது எவ்வளவு உண்மை.என்பது புலனாகின்றது. மேலும் இந்த அடிப்படையிலேதான் போலும். மேலை நாட்டு உயிர்நூற் புலவனாகிய 'டார்வின்' என்பான், மனிதன் குரங்கிலிருந்து தோன்றியவன் என எழுதிச் சென்றான் என்று நினைக்க வேண்டியுள்ளது.

'குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது இறுதியாக அவ்ர்கள் கண்ட முடிவு. அதற்குமுன் உயிர்த்தோற்றம் எப்படி உண்டாயிற்று என்று ஆராய்கின்றவர் பலர். 'எட்வர் கிளாட்' என்பார் தம் 'உயிர்த் தோற்றம்' என்னும் நூலில் உயிர் எவ்வாறு தோன்றி வளர்ச்சியுற்றது என்பதைக் காட்டியுள்ளார். இவர் நூல் 1888இல் வெளியிடப் பெற்றதாகும்? ஆனால், அதற்குப்பிறகு ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டாக" அறிஞர்கள் அவ்வுயிர்த்தோற்றம் பற்றி ஆராய்ந்து கொண்டேதானிருக்கின்றார்கள். ஒரளவு அவர்கள் ஒருவகையான முடிவினைப் பெற்றிருக்கின்றார்கள் என்றாலும், திட்டமாக அவர்கள் வரைய்றுத்து முடிவுகட்டவில்லை என்றே சொல்லலாம். உலகத் தோற்றித்துக்குக் கூறிய அனைத்தும் உயிர்த்தோற்றத்துக்கும் பொருந்தியனவாகும்.

உலகம் குரிய்னிலிருந்து பிரிந்து வீழ்ந்த பொறிதான் என்றால், அந்தக் கொடிய நெருப்பில் அந்த ஆதிகாலத்தில் யார்தான் வாழ்ந்திருக்கக்கூடும்? நிலம் மிக வெம்மையாய் இருந்த அந்த நாளில் எந்த அறிவுடைய உயிரும் இருந்திருக்க, முடியாது. அனைத்தும் நெருப்பில் உற்று ஒழியும் என்பது, கண்கூடு. எனவே, உலகம் உதிர்ந்து நெடுங்காலத்துக்குப் பின்னரே நிலம் வாழ்வுக்கு ஏற்றது என்ற நிலையில் குளிாந்த பிறகுதான், உயிர்கள் ஒவ்வொன்றாகத் தோன்றியிருக்க வேண்டும். இன்று உயிர் வாழ்வுக்கு ஏற்றதாய் இல்லாமல் மிகக் கொடிய குளிர்ப்பிரதேசமாய் உள்ள வடதென் துருவங்களில் ஒரு காலம் வெம்மை ஒளி கான்றுகொண்டிருக்குமன்றோ?, அச்சூடு தணிந்து, இன்றைய் நில நடுக்கோடு பெறும் வெம்


@ 1. Story of creation, by EDWARD CLODD. 2. இந்நூல் முதல் பதிப்பு வந்தபோது.