பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர்த்தோற்ற வளர்ச்சி

187



மையை அந்தத் துருவங்கள் பெற்றிருந்த நாள் ஒன்று இருக்கத்தானே வேண்டும்? ஆகவே, அந்நிலையில் முதல் முதல்-நெடுங்காலத்துக்கு முன், அங்கே உயிரினங்கள் தோன்றி வாழ்ந்துள்ளன என்கின்றனர் ஆய்வாளர். இரு துருவங்களிலும். வடதுருவத்திலேதான் உயிர் தோன்றியிருக்க வேண்டும் என்பர். எனினும், அதற்குக் காரணம் காட்ட இயலவில்லை. அந்த வடதுருவத்தில் தோன்றிய உயிரினம். நாள் செல்லச் செல்ல நிலத்தின் பிறபகுதிகள் குளிர்ச்சி அடைய அடைய, அந்த இடங்களில் பரவி வளர்ச்சியடைந்திருக்கக்கூடும். ஒருவேளை தென்துருவத்துள்ளும் உயிர்த்தோற்றம் இருந்து, அருகே பெரு நிலப்பரப்பு ஒன்றும் இன்மையினாலும், அகன்றாழ்ந்த கடல்களைக் கடக்க முடியாமையாலும், தோன்றிய, உயிர்கள் வெம்மைமாறிக் குளிர் மிகமிக அப்படியே அங்கேயே அழிந்துவிட்டனவோ என்று 'எண்ணவும் இயலும். எப்படியாயினும், நிலம் தோன்றி நெடுங்காலத்திற்குப் பிறகே, அதன் , வெம்மை மாறி மாறித் தண்மை உண்டாக உண்டாக, உயிர்த்தோற்றமும் சிறிது சிறிதாக உண்டாயிற்று என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளுகின்றனர்.

அத் தோற்ற நாளிலே உயிர்கள் எப்படி இருந்தன என்பதைப் பலர் பலவகையாக ஆராய்கின்றனர். உயிர் அணுக்கள், அப்படியே இங்கும் அங்கும் காற்றும் நெருப்பும் அலைக்க, அலைந்துகொண்டே நெடுங்காலம் இருந்து பின்னர்த்தான் அசைவுபெறத் தொடங்கின என்பர். அப்போது ஆந்த உயிர்களுக்கு ஒரு வேளை முதல் அறிவு தோன்றியிருக்கக் கூடும். "அமீபா'[1] என்று அதை ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் வ்ழங்கியுள்ளார்கள். உயிர்த்தோற்றத்திற்கு முன் எத்தனையோ ஊழிகளும் மாற்றங்களும் நடைபெற்றிருக்கக் கூடும். ஆனால், அவற்றினாலெல்லாம் உயிர்களுக்கு எவ்வித மாற்றமும் கெடுதியும் இல்லை. என்றாலும், உயிர் தோன்றிய நாளிலிருந்து நிலத்தில் நேரும் மாற்றம் ஒவ்வொன்றும் ஓரளவு உயிர்த்


  1. 1. Amoeba