பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

கவிதையும் வாழ்க்கையும்



தன்மைகளையும். மாற்றிக் கொண்டே வந்தது என்பது உண்மை.

இவ்வாறு தோன்றிய உயிர், முதலில் பிறந்தது நீரிலா நில்த்திலா என்ற ஆராய்ச்சி ஒருவாறு முடிவுப் பெற்றுவிட்டது. நிலத்துக்கு முன்னர்த் தோன்றியது நீரானமையானும், நிலத்தினும் நீர் விரைவில் தண்மை-அடையும் தன்மைத்தாதலானும், உயிர்ப்பொருள்கள் நீரிலேயே முதலில் தோன்றியிருக்க வேண்டும். இவ்வுயிர்த் தோற்றங்கள் அனைத்தும்' நிலத்தன்மையிலோ அன்றி நீர்த்தன்மையிலோ சூரியனது.ஒளிக் கதிர்கள் பொருந்தும் வகையிலேதான் அமைகின்றன என்பர். இன்றும் அது உண்மையாகக் காண்கின்றது. சூரிய ஒளியில் உள்ள செடிகள் அவ்வொளி பரவா இடத்தில் இருப்பனவற்றைக் காட்டிலும் நன்கு செழித்து வளர்வதைக் காண்கின்றோம். ஒளி உல்கப்பரப்பில் உள்ள உயிர்அணுக்களின் சேர்க்கை மூலமே தன் தோற்றத்தை உலகுக்கு அளிக்கின்றது. மூல உயிர் அணுக்கள்[1] எத்துணைக் காலம் உலகில் வடிவும் தன்மையும் பெறாமல் உலவிக்கொண்டிருந்தன என்பதை இன்னும் கணக்கிடவில்லை எனலாம். அந்த உயிர் அணுக்கள் செறிந்தும் கூடியும், வளர்ந்தும் பிரிந்தும், பல வேறு வகையில் பல காலம் உலகில் உலவியிருக்கக் கூடும். அந்த உயிர் அணுவின் அசைவுக்கும் அமைப்புக்கும் நில்த்தைக் காட்டிலும் நீரே ஏற்றதாயும் அமைந்திருக்கும். அந்த உயிரணுக்கள் தத்தம் பிரிவாலும் சேர்க்கையாலும், பிற இயல்களாலும் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு முதல் முதலாக உயிர்தோற்றத்தை உலகுக்குப் புலப்படுத்தியிருக்க வேண்டும். அந்த உயிர் அணுக்கள் அன்றுதொட்டு இன்றுவரை உயிர் வாழும் எல்லாப் பொருள்களிலும் நிறைந்துள்ளதை ஆய்வாளர்கள் விளக்கிக் காட்டியுள்ளார்கள். ஒரு துளி இரத்தத்தில் இத்தகைய உயிரணுக்கள் பலப்பல நிறைந்துள்ளன. ஆனால், அந்த முதல், அணுக்கள் இருந்த நிலையிலேதான் இவையும் இருக்கின்றன என்று கூற முடியாது. இந்தக் கோடி கோடியாகிய ஆண்டு


  1. 1. Cells