பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர்த்தோற்ற வளர்ச்சி

189



களுக்குள் உயிர்த்தோற்றம் எத்தனை எத்தன்ையோ வகைகளில் மாறுபாடுற்று வளர்ந்தமை போன்றே, அவ்வுயிர் அணுக்களும் மாற்றமும் பிறவும் பெற்றிருக்க வேண்டும். எப்படியோ, அசையும் பொருள்களாய் இருந்த உயிர் அணுக்களே இன்று அவற்றின் தன்மையையும், தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆராயும் மனிதனாக மாறி-பல கோடி, ஆண்டுகளுக்குப்பின்-இவ்வுருவம் பெற்றிருக்கிறது என்பது தெளிவாகின்றது. .

இந்த உயிர் வளர்ச்சி, காலத்தால் சிறப்புறுகின்றதென்றே சொல்லலாம். அறிவாலும் இது சிறப்புறுகின்ற தென்பர். மற்றும், அறிவு குறைந்த உயிர்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உள்ள கால வேறுபாடு மிக அதிகம். ஆனால், அறிவு வளர்ச்சி பெற்றவற்றுள் அத்துணை வேறுபாடு காண இயலாது. காலத்தால் மட்டுமின்றி, இன்றைய காட்சியிலும் இவ்வேறுபாடு காண இயலும் முதல் உயிர்கள் என்று காட்டும் மரம் முதலிய தாவர இனமும், மீன் முதலிய நீர் வாழ்வனவும் தம் இனப் பெருக்கத்தை அமைத்துக் கொள்ளும் வழியைக் காணல் வேண்டும். ஒரு மரத்தில் உள்ளவை எத்தனையோ மலர்கள், காய்கள், கனிகள். அவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மரமாக மாறவேண்டும்! அங்ங்ணம் மாறுபாடு நடைபெறுகிறதா? இன்னும் ஆல் அரசு போன்றுள்ள பலவற்றில் ஒரு பழத்துள் எத்த்ன ஆயிரம் ஆயிரம் விதைகள் அடங்கியுள்ளன. அத்தனையும் தம் அன்னை மரத்தின் அடிஒற்றி வள்ர்ந்து வருகின்றனவா? இல்லையே! அவற்றுள் பெரும்பாலன அழிவு பெற, எங்கோ ஒருசில தானே வேரூன்றி மரமாக வளர்கின்றன்? அதைப் போன்றே நீரில் வாழும் மீன் இனமும் அமைகின்றது. ஒவ்வொரு முறையிலும் மீன் எத்தனையோ இலட்சக்கணக்கான முட்டைகளை இடுகின்றது. ஆனால், அவற்றுள் ஆயிரத்துள் ஒன்றுகூட உருவுற்று வளர்வதில்லையே! என்வே, முதல் உயிர்க்ளெல்லாம் தம் இனத்தை வளர்க்கப் பெருவர்ரியாகத் திட்டம் தீட்டியது போன்று கருவுயிர்த்தன என்றும், எனினும் காலம் அதை அப்படி வளரவொட்டாது தடுத்து நிறுத்தி, ஓர் அளவிலேயே அவற்றின் வள்ர்ச்சியை அமைத்ததென்றும் அறிய இடமுண்டன்றோ! இவ்வாறு