பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

கவிதையும் வாழ்க்கையும்


 வளர்ந்த மரமும் மீனும் பின்னும் காலப் போக்கில்-உயிர் வளர்ச்சி நிலையில், பலப்பல உயிர்களாக-உயிர்ப் பொருள்களாக -உருப் பெறலாயின.

பின்வரும் சிதலும் ன்றும்பும் தும்பியும் வண்டும் மீனைப்போன்றும், ஆலம்பழத்தைப் போன்றும், அத்துணைப் பேரளவில் இன்ப்பெருக்கம் செய்ய முயலாவிடினும், அவற்றின் அடுத்தபடியாக அமைகின்றன. எனினும், அவற்றுள்ளும் பெரும்பான்மை அழிந்தொழிய, சில சிலவே நிற்கின்றன. அந்த எல்லையைத் தாண்டி விலங்கினத்திற்கு வருவோமாயின், அவை ஒரு சிலவற்றை ஈனுகின்றன. பன்றியும், நாயும், பூனையும்,பிறவும் ஒன்றுக்கு மேற்பட்ட பல குட்டிகளை ஈனுவதை நாம் அறிவோம். ஆனாலும், அவற்றின் எண்ணிக்கை மீன் முட்டையின் எண்ணிக்கையிலோ, பழ விதையின் எண்ணிக்கையிலோ ஆயிரத்தில் அன்றி இலட்சத்தில் ஒரு பகுதிகூட இராது என்பது உண்மைதானே? ஆகவே, வரையறுக்கப்பட்ட ஒர் எல்லையிலேதான் அவை இனப்பெருக்கம் செய்கின்றன.எனவே, அவற்றுள் அழிவு அதிகமாக ஏற்படுவதில்லை. எங்கோ- இரண்டொன்று கிெட்டொழியப் பெரும்பாலன உயிர்பெற்றே வாழ்கின்றன.

இறுதியாக யானை, மாடு முதலிய விலங்குகளைப் போன்று அவற்றை ஒட்டி உணர்வு பெற்று ஓங்கிய மனிதரும் முறைக்கு ஒரு கருவைத்தான் பெற்றெடுக்கின்றனர். ஒரு பெண்ணுக்கு இரு குழந்தைகள் பிறந்தால், அதை உலகம் அதிசய நோக்கோடு காண்கின்றது. அந்த அளவில், ஒரு கருவில் ஓர் உயிர் என்ற தத்துவத்தில் மனிதர் அமைந்துவிட்டனர். ஆகவே, மனிதத் தோற்றத்தில் அழிவு என்பது மிகக் குறைவு. பிறந்து உலக வாழ்க்கையில் அமைந்து, பயன் பெற்று முற்றிய பின்னர்த்தான், ம்னிதர் இயற்கை முடிவு எய்துகின்றனர் என்பது நாம் அறிந்த ஒன்று. இவற்றையெல்லாம் நோக்க, தொல்காப்பியர் வகைப்படுத்திக் கூறிய அந்த உயிர்த்தோற்றத்தின் வளர்ச்சி முறை முற்றும் பொருத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்பது தேற்றம்,