பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றங்களைத் தமிழ் இலக்கியங்களும் தொல்காப்பியமும் எவ்வெவ்வாறு வரையறுத்து விளக்குகின்றன என்பதும், எல்லா உயிர்க்கும் இன்பம் பெறும் இயல்பு உண்டு என்பதும், உயிர் வளர்ச்சி அடைய அடைய, அதன் அறிவும் வளர்ச்சியடைகின்றதென்பதும், உயிர்த்தோற்ற நாள்களை இவ்வளவு என வரையறுக்க முடியாவிடினும், உயிர்கள் எப்படிக் கால எல்லையில் ஒன்றையொன்று பற்றிப் பெருகின என்பதும், அறுவகை அறிவு எவை எவை என்பதும், அவற்றைப் பெற்ற உயிர்கள் எவை எவை என்பதும், அவை அவ்வவ்வறிவுகள் மூலம் எவ்வாறு ஒன்றை ஒன்று தொடர்ந்து வருகின்றன என்பதும், அவற்றின் இறுதியிலே விலங்காகிய குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான் என்பதும், அம்மனிதன் அந்தப் பிற உயிரினங்களை உறுப்புக்களால் ஒத்தவனுயினும், மன அறிவால் அவற்றினும் வேறுபட்டவன் ஆகின்றான் என்பதும், அதனாலேயே மனிதன் அனைத்தினும் மேலானவனாய் விளங்குகின்றான் என்பதும் நன்கு புலனுகின்றன. இனி அம்மனிதனின் வளர்ச்சியையும் வாழ்வையும் காண்போம்.