பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

கவிதையும் வாழ்க்கையும்


தால், இவ்வண்ட கோளத்தின் தோற்ற அமைப்புக்களையும் கூறுபாடுகளையும், பிற இயல்புகளையும் அறிவது போன்றே, இன்றைய உயிரினத்தின் உச்சியில் சிறந்துள்ள மனிதன், தன்னை அறிவதன்மூலம், தனக்கு மூலகாரணமான உடற் கூறுகளையும், அவற்றை உருவாக்கிய பிற உயிர்த்தன்மைகளையும், அவற்றின் தோற்ற வளர்ச்சியையும், பிறவற்றையும் அறிந்துகொள்கின்றான். எனவே, மனிதன் தன்னை அறிவதன்மூலம் தரணியை அறிந்து கொள்கின்றான்.

ஒரு சீடன் ஞானம் கைவரப் பெறுவதற்கு அரும்பாடு பட்டானாம். நாடும் காடும் சுற்றி நல்ல ஞானாசிரியனைத் தேடித் தனக்கு வழிகாட்டுவார் இல்லையா என ஏங்கினானாம். இறுதியில், ஒரு ஞானாசிரியர் அவன்முன் தோன்றினாராம். அவன், தானும், தன் நிலையும் கெடாதிருப்பதற்காக, அல்லது மோட்சம் அடைவதற்காக ஒரு வழியைச் சொல்லுமாறு அக்குருவை வேண்டினானாம். அவர் அதற்கு அதிகமாக ஒன்றும் பேசாமல், ‘உன்னை நீ அறிந்தாயாகில் உனக்கொரு கேடுமில்லை; என்னை நீ கேட்கையாலே, ஈது உபதேசித்தேனே.’ என்று கூறினாராம்; அதாவது, ‘என்னை- நீ கேட்பதால், நான், ஒன்றும் உனக்கு அதிகமாகச் சொல்லவேண்டுவதில்லை; உன்னை நீ அறிந்து கொள்வாயானால், அதுவே உனக்கு நன்மையாகும்,’ என்றாராம். உடனே அவன் கோபங்கொண்டு, ‘என்னைத்தான் சடமாய் உள்ளத்து எண்ணியோ சொன்னீர் ஐயா; தன்னைத் தான் அறியா மாந்தர் தரணியில் ஒருவர் உண்டோ?’ என்று வினவினானாம். தன்னை, அவர் இறந்த ஒரு பிண்டமாகக் கருதி அவ்வாறு பேசினார், என அவன் நினைத்துவிட்டான். மேலும், உலகில் தம்மைத்தான் அறிந்து கொள்ளாதவர் ஒருவரும் இல்லை என்பதும் அவன் முடிவு. பாவம்! அந்த வேகத்தில் - அறியாமையால் - அவன் அவ்வாறு பேசினான். பிறகு அவர் அவன் தோற்றத்தையும், கனவிலும் நனவிலும் வந்து செல்லும் வடிவையும், பிற வேறுபாடுகளையும் விளக்கிக் கூறி, உலகில் உண்மையில் தம்மைத்தாம் அறிந்தவர் ஒருவருமே இல்லை என்றாராம். பிறகு அவன் அறிவு வரப்பெற்றுத் தன்னை