பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

கவிதையும் வாழ்க்கையும்


எவ்வாறு? - கவிதை கட்டுப்பாட்டுக்கு அடங்காத ஒன்றா? அடங்காத ஒன்றாயின், அதற்கு இலக்கணமெல்லாம் எதற்கு? இவைபோன்ற கேள்விகள் எழுதல் இயல்புதானே? கவிதை ஊற்றுப் பிறக்குமிடத்தை ஒருவாறு வரையறை செய்யின் இக் கேள்விகளுக்கெல்லாம் விடைகாண முடியும். இன்று நாட்டிலும் உலகிலும் எத்தனையோ மொழிகளில், எத்தனையோ வகையான பாடல்களைப் பாடுகின்றனர். அத்தனையும்.மக்களால் போற்றப்படுவதில்லையே காரணம் என்ன? கவிதை நாம் முன் கூறியபடி வெற்று எழுத்தாலும் சொல்லா லும் ஆக்கப்படுவதாயின், எப்படிப் போற்றப்பட்டிருக்கும்? ஆனல், கவிதை அவற்றின் உச்சியில் தன் இயல்பான உயிர் நலம் கொண்டு ஒளிர்வதாகு மல்லவா! ஆகவே, உயிர் நலமுடைய கவிதைகளே எம்மொழியிலும் மக்களால் போற்றப்படுகின்றன. அல்லாதன...நாம் சொல்ல வேண்டா.

கவிகள் நிலைபெற்று வாழ்வதற்கு அவற்றின் உள்ளீடாகிய உயிர்ப்பொருள்களே காரணம் என்பது கண்டோம். கவிதையைக் கலைகளுள் ஒன்றாக—ஏன் கலைகளுக்கெல்லாம் மேலாய கலையாகக் காணல் வேண்டும். கலை என்பன ஒவியமும், சிற்பமும்,நடனமும் கற்பனையுந்தான் என்றால், அக்கலைகள் அனத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கணக்கிடின், அவற்றின் உச்சியில் ஓங்கும் கலையே கவிதைக் கலையாகும். இக்கவிதைக் கலையின் உடல் உறுப்புக்களே யாப்பிலக்கணத்தில் காணப்படும் எழுத்தும், அசையும், சீரும், தளையும், அடியும், தொடையும். பிறவும், இதன் உயிர்நர்டிதான் பொருள்.

ஆமாம்; பாடுகின்ற கவிஞன் பொருள் இன்றிக்கூடப் பாடுவனா? என்று கேட்கத் தோன்றும். அதற்கு இற்றை நாளில் மட்டுமின்றி இடைக்காலத்திலும் உண்டாகி மறைந்து போன எத்தனையோ பாடல்கள் சான்று தருகின்றன. தொல்காப்பியர் காட்டியபடி, ‘குறித்த பொருளை முடிய நாட்டாது’, குன்று முட்டிய குருவிபோன்று இடர்ப்பட்டு மாய்கின்ற புலவரே, நாட்டில் பலராவர். அப்படியாயின், பின்பு