பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

கவிதையும் வாழ்க்கையும்



அவன் உள்ளம், அதுபோன்ற சிறு கற்பாறையுள் தன் குடிசையில் நீரைத் தேக்கி வைத்துத் தன் தேவைக்குப் பயன்படுத்தச் செய்தது. அதைப் போன்றே, தன் உணவுப் பொருள்களையும் சேர்த்து வைக்கச் செம்மைப் படுத்தப்படாத பாத்திரங்களை அவன் உபயோகப்படுத்திக் கொண்டான். அந்தக் கல் ஆயுதங்களையும், கற்பாத்திரங்களையும் அவை போன்ற பிறவற்றையும் கொண்டே வரலாற்று ஆசிரியர்கள் அவன் வாழ்ந்த அந்தக் காலத்தைத் தம் வரலாற்றில் கற்காலம் என்று குறித்துக் கொண்டார்கள். அக் கற்காலத்திலும் முதலாம் 'கற்காலம்’, ‘இரண்டாம் கற்காலம்' என்று சில கற்காலங்களைச் சிலர் குறிக்கின்றனர். எப்படியோ அந்த ஆதி மனிதன், தான் வாழவேண்டும் என்ற தன் உணர்வு பிறந்த அந்தத் தொடக்க நாளில் கற்களையே தன் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களாவும், தன்னைப் பாதுகாத்துக்கொள்ளப் பயன்படும் ஆயுதங்களாகவும் கொண்டான் என்பது தேற்றம்.

அந்த ஆதி காலத்தில் மனிதன் தனியாக வாழ்ந்தானா அன்றி மனைவியோடு வாழ்ந்தானா என்ற கேள்வி எழவே இடமில்லை. தனியாக வாழ்ந்திருப்பானாயின், அவன் செத்த அன்றைக்கே மனித இனமும் கட்டாயம் மறைந்திருக்கும். சாதாரண ஒரறிவுடைய உயிர் தொடங்கி ஆண் பெண் கலப்பின்பம் உண்டென்பதை மேலே கண்டோம். அந்த நிலையில் ஆதிமனிதன் மட்டும் அதற்கு எப்படி விலக்காக முடியும்? விவிலிய நூலில் கூறிய 'ஆதாமும் ஏவாளும்' என்ற கதை ஆதி மனிதன் தன் காதலியோடு எவ்வாறு வாழ்ந்தான் என்பதைக் காட்டுகிறது. அதைக் கொண்டாலும், விட்டாலும், எப்படியும் மனிதன் மனைவி மக்களோடு வாழ்ந்திருந்தான் என்பதை மட்டும் மறுக்கமுடியாது. முதலில் தோன்றியவர் பெண்ணா, ஆனா என்றெல்லாம் இங்கு நாம் ஆராய வேண்டா? எப்படியோ விலங்கினத்தினின்று மன உணர்வு பெற்ற மனிதன், தான் தனித்து வாழாது, பெண்ணினத்தைத் தழுவி, தன் மனித இனத்தைப் பெருக்கிக் கொண்டே, அதே வேளையில் தனக்கு முதற்காரணமாயிருந்த