பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித வாழ்க்கை

217


 உண்டாவது அம்மனிதன் உள்ளத்து ஒரு விதப் புத்துணர்ச்சியைத் தோற்றுவித்திருக்கும். தான் எல்லா உயிரினும் மேம்பட்டவன் என்றால், பின்பு ஏன் தான் தொடங்கும் எல்லாக் காரியத்திலும் வெற்றிபெற முடியவில்லை என்று சிந்தித்திருப்பான். தன் செயலைத் தடுக்கத் தன்னிலும் மேலான ஒன்று இருக்கத்தான் வேண்டும் என்ற உணர்வு பிறந்திருக்கும். அவ்வுணர்ச்சி பெருகப் பெருக, தனக்கு அறிய முடியாததாய்த் த்ன்னினும் மேம்பட்டதாய் ஒரு பொருள் இருக்கவேண்டும் என்ற உணர்வு அவன் உள்ளத்தில் பிறந்திருக்கும். ஆறாவது அறிவான மன்த்தின் துணைகொண்டு, அவன் அந்த நெறியே நெடுந்துரம் சென்றிருப்பான். அந்தச் சிந்தனையின் விளைவே, மனிதனுடைய, தனக்கு மேலும் ஒரு கடவுள் உண்டு என்ற உணர்வாகும்.

தனக்கு மேலும் தன்னால் அறிய முடியாத ஒரு பொருள், தான் நினைத்ததை யெல்லாம் பெற முடியாமல் தடுக்கும் என்று உணர்ந்தபின் அவனுக்கு அதனிடம் அச்சம் ஏற்பட்டிருக்கும். அனைத்தினும் மேலான தன்னைக் கண்டு, விலங்கும் பறவையும் பயந்து செல்வது போன்று. தானும் அப்பொருளுக்கு அஞ்சி வாழவேண்டும் என்று கற்பனை செய்து கொண்டான். அதனாலேதான் சமயத்தின் தொடக்கக்காலத்தில் அச்சத்தின் அடிப்படையில் அது வளர்ந்தது என அறிகின்றோம். மிகு பழங்கால மனிதரின் சமயநெறி பெரும்பாலும் அச்சத்தின் அடிப்படையில் முளைத்ததுவேயாம். இறைவனுக்கு அடியவர் அஞ்சியும் அன்புபட்டும் தொண்டாற்றுகின்றார்கள் என்பதை அப்பர் 'அஞ்சி யாகிலும் அன்புபட்டாகிலும், நெஞ்சம் வாழி நினை,' என்று நெஞ்சினுக்கு இறைவழிபாட்டின் நெறியினைக் காட்டுகின்ருர். இவ்விரண்டுள் அச்சம் வழியாக எழுந்த வழிபாடே முன்னையது. உலக சமய வரலாறுகள் அனைத்தும் இந்த உண்மையை வலியுறுத்தும் என்பது உறுதி. பழங்காலத் தேவதைகளின் வரலாறும், அந்தச் சிலைகளின் தோற்றமும் நம் நாட்டில் இன்னும் நிலைபெற்றுள்ளனவே. கிறித்தவ விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டில் நெருப்பு மழையைப்

க.வாーl4 .