பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

கவிதையும் வாழ்க்கையும்



பெய்வித்தல் முதலியவற்ருல் கடவுள் மக்களை அச்சத்தின் வழி திருத்த நினைத்தார் என்று கூறப்படுவனவெல்லாம் இந்நெறியின் பாற்பட்டனவே. ஆதிமனிதனுக்குத் திருந்திய பண்பட்ட அன்பு இல்லாமையினலேயே தனக்கு அவன் ஏற்ற வகையில் தனது கடவுள் நெறியையும் அமைத்துக்கொண்டான் என்பர் ஆராய்ச்சியாளர்.

இவ்வாறு அச்சங் காரணமாகத் தோன்றிய சமயம், நாளடைவில்-மனித உள்ளம் வளர வளர-அன்புச் சமயமாக மாறியிருக்கவேண்டும். எனினும், உலகில் மொழி விரிந்துள்ளது போன்றே சமயமும் விரிந்துள்ளதைக் காண்கின்றோம். 'கடவுள் ஒருவரே' என்ற உணர்வு அன்றும் இன்றும் மாறாமலே தான் போற்றப்படுகின்றது. ஆனால், உலகில் இத்தனை வேறு பாட்டுச் சமயங்கள் இருப்பானேன்? இருப்பதோடு மட்டுமா? எத்தனை சமயப்போர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன! எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் சமயப் போரால் நடை பெற்ற சண்டைகளில் செத்து மடிந்திருப்பார்கள்! ஏன்? நம் நாடு சமயத்தின் அடிப்படையிலே-அதனால் விளைந்த கலகத்திலே-அதனால் செத்த பல்லாயிரக் கணக்கான மக்களின் இரத்தத் தியாகத்திலே-இரண்டாக்கப்பட்டதே! ஒன்றிய சமய உணர்ச்சியெல்லாம் மாறி இப்படி உலகில் சமய வெறி கால் கொள்ளுவானேன்? நமக்கு இங்கு அந்த ஆராய்ச்சிகளெல்லாம் தேவையில்லையானமையின், அவற்றை விடுத்து, பொதுவாக மனிதனது பண்படாத தீ நெறி பொருந்திய மனந்தான் இந்தக் கொடுமைக்கெல்லாம் காரணம் என்பதை மட்டும் சுட்டிக் காட்டி மேலே செல்வோம்.

தனக்கு மேல் ஒருவன் உண்டு என்று அறிவதே சமய வாழ்வு என்று கண்டதும், அப்படிக் கண்டதில் மனிதன் மற்ருெரு நன்மையையும் தேட நினைத்தான். தனக்கு மேல் ஒருவன் இருந்து, தான் செய்யும் நன்மை தீமைகளைக் கண்டு, அவற்றுக்கு ஏற்ற பரிசோ தண்டனையோ தருவான் என்ற உணர்விருப்பின், தான் தவறி மற்றவருக்குத் தீங்கிழைக்க முடியாது என்ற உணர்வினில் உலகில் நல்லவனாக வாழவும்,