பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

கவிதையும் வாழ்க்கையும்



வெப்பம் நீங்கத் தண்பெயல் பெய்து நீரும் நிழலும் உணவும் பிறவும் உளவாகிய காட்டகத்துக் களிறு முதலியவற்றோடு சென்றிருத்தல் வேண்டுதலின் வஞ்சிக்கும் அம்முதற் கரு உரியும் வந்தனவாம்!

'இரு பெரு வேந்தர் தம்முள் மாறு கொண்டவழி எதிர் செலற்கு ஆற்றாது போய் மதிலகத்திருந்த வேந்தன், மதில் பெரும்பாலும் மருதத்திடத் தாதலானும் அம்மதில் முற்றுவோனும் அந்நிலத்திருத்தலானும், ஒருவன் வாயில் வேண்டாது திறவாது அடைத்திருந்த ஒப்புமையானும் உள்ளிருந்தவனும் புறப்பட விரும்புதலானும், மருதம் போல இதற்கும் பெரும் பொழுது வரைவின்மையானும், சிறு பொழுதினும் விடியற்காலமே போர்செய்தற்குக் காலமாதலானும் உழிஞை மருத்த்திற்குப் புறனாயிற்று.

'நெய்தற்குரிய பெருமணல் உலகம் போலக் காடும் ஆமலையும் கழனியும் அல்லாத களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும், பெரும்பொழுது வரைவின்மையானும், எற்பாடு போர்த்தொழில் முடியும் காலமாதலானும், இரக்கமும் தலைமகட்கே பொரும்பாலும் உளதாயாவறு போலக் கணவனை இழந்தார்க்கன்றி வீரர்க்கு இரக்கமின்மையானும், அவ்வீரக் குறிப்பின் அருள் பற்றி ஒருவர் ஒருவரை நோக்கிப் போரின்கண் இரங்குபவராகலானும், பிற காரணங்களானும் நெய்தற்குத் தும்பைப் புறனாயிற்று.

பாலை தனக்கென ஓர் நிலமின்றி நால்வகை நிலத்தும் நிகழுமாறுபோல முற்கூறிய புறத்திணை நான்கும் இடமாக வாகைத்திணை நிகழ்தலின், தனக்கு நிலமின்றாயிற்று. நாளும் நாளும் ஆள்வினை அழுங்க-இல்லிருந்து மகிழ்வோர்க்கு இல்லையாற் புகழ்' என ஆள்வினைச் சிறப்புக் கூறி பிரியுமாறு போல இதற்குத் துறக்கமெய்தும் ஆள்வினைச் சிறப்புக் கூறலும் கொள்க. பாலை பெருவரவிற்றாய்த் தொகைகளுள் வருமாறு போல வாகையும் பெருவரவிற்ருய் வரலும் கொள்க!

'எண்வகை மணத்திலும் நான்கு மணம் பெற்ற பேருந்திணைபோல இக்காஞ்சியும் அறமுதலாகிய மும்முதற்