பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வொடு பிணைந்த கவிதை

259



யல்லவோ? அந்தக் கவிதைகளைப் பாடிய புலவருட் பலர், வறுமையில் வாடி வதங்கியவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் பாடல்களே அவர்களை ஆட்கொண்ட வறுமைக் கொடுமையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. எனினும், அவர்கள் உள்ளங்கள் அந்த வறுமையால் வாடவில்லை. உடல் நிலை வாடியிருக்கும்; ஆனால், உள்ளம் மலர்ந்திருக்கும். அந்த மலர்ந்த நிலையில், அவர்கள் தங்கள் வாழ்வையே பாட்டாகப் பாடும் பண்பு பெற்றுவிட்டார்கள். அதனலேதான் அவர்கள் வாழ்வின் வறுமையும் பாட்டின்வழிச் சிறப்புற்றுக் காண்கின்றது. அந்த வாழ்வோடு பிணைந்த பிற பண்புகளும், செயல்களும் கவிதைகளின் பொருள்களாய் அமைந்துள்ளன. அவ்வாறு வாழ்வைப் பிணைத்த காரணமேதான் கவிதை இன்றளவும் வாழ்வதற்கு அடிப்படையாய் அமைந்துள்ளது.

கவிதை பாடும் புலவர்கள் எத்தனையோ வகையான பொருள்களை பற்றிப் பாடுகின்றார்கள். சிலர் கண்டதையும், வாழ்வில் தாம் அனுபவிப்பதையும் உணர்ந்துணர்ந்து பாடுகின்றனர். ஆனால், சிலர் காணுத ஒன்றைப்பற்றிப் பலப்பல பாடல்கள் பாடுகின்றனர். காணாத ஒன்றைப்பற்றிக் கேட்பதைக் காட்டிலும், காணும் ஒன்றைப்பற்றிக் கேட்பதே மக்கள் விருப்பமாய் அமைகின்றது. நாளிதழைப் புரட்டிப் பார்க்கும் போது, ஒருவர் தாம் நேரிற்கண்ட ஒரு நிகழ்ச்சியை முதன் முதல் தேடி எடுத்து ஆவலோடு படிப்பதை இன்றும் காண்கின்றோமே! நேரில் கண்ட நிகழ்ச்சிதானே! அதை ஏன் படிக்க வேண்டும்?' என்றோ, அல்லது "கடைசியில் படிக்கலாம்,' என்றோ யாரும் விட்டுவிடுவதில்லை. அதுபோன்றே, கவிதை களும் மனிதன் வாழ்வில் காணும் நிலைகளை விளக்கின், பலரானும் விரும்பிப் படிக்கப்படும். அல்லன எல்லாம் சொல்லாமலே நாட்டிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ளும்.

நாட்டில் சில கவிதைகள் வாழவேண்டா என்பர் ஒரு சாரார். அதற்கு அவர்கள் காட்டும் காரணங்கள் பல இருக்கலாம். எனினும், அந்தக் காரணங்களால் அவர்கள் விரும்பும் கவிதைகள் நாட்டில் அழிவு பெறுவதில்லை. அதற்கு மாருக,