பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

கவிதையும் வாழ்க்கையும்


‘தேன்தூங்கும் உயர்சிமைய
மலைநாறிய வியன்ஞாலத்து
வலமா திரத்தான் வளிகொட்ப,
வியன்காண்மீன் நெறிஒழுகப்
பகற்செய்யும் செஞ்ஞாயிறும்,
இரவுச் செய்யும் வெண்டிங்களும்
மைதீர்ந்து கிளர்ந்துவிளங்க,
மழைதொழில் உதவ மாதிரம் கொழுக்கத்
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய’

(மதுரை. 1-11)

என்று வியன் ஞாலத்தையும், அதிற் பெய்யும் மழையினையும், அதனால் விளையும் பயனையும் கூறி, அவை தாம் உலக வாழ்வின் அடிப்படை என்பதைக் காட்டித்தான், வாழ்வின் நிலைமையை விளக்கும் நீண்ட பாட்டினுள் புகுகின்றார்.

மலைபடு கடாம் என்ற பாடலின் ஆசிரியர் பெருங்கெளசிகனார், தமது நூலை,

‘திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்

விண்ணதிர் இமிழ்இசை கடுப்ப’
(மலைபடு. 1-2)

என்றே தொடங்குகின்றார். பட்டினப் பாலையின் ஆசிரியர் இவர்களையெல்லாம் விட்டு மேலேயும் ஒருபடி தாண்டிவிட்டார் என்று சொல்லவேண்டும். மழை பெய்தால்தான் வளஞ்சுரக்கும் என்கின்றார்கள் இவர்களெல்லாம். ஆனால், அவரோ. ‘மழை பெய்யா விடினும் காவிரி வற்றாது வளஞ்சுரக்க வேண்டும்’, என விழைகின்றார். இயற்கை மாறுபாடுகளினாலும், மன்னவன்முறை தவறினாம், வேறு பிற கொடுமைகளாலும் ஒருவேளை வானம் பெய்யாது ஒழியலாம். அந்தக் கொடுங்காலத்தும் வற்றாது வளம் சுரக்கும் வண்தமிழ்க் காவிரி என்று, தம் காவிரிப் பூம்பட்டினத்தைப் பற்றிய பாடலை அவர் மிக அழகாகத் தொடங்குகின்றார்.

‘வசையில் புகழ் வயங்கு வெண்மீன்,
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவில்,