பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டு

277


சிறுபாணாற்றுப்படையில் அதன் ஆசிரியர்.நல்லூர் நத்தத்தனார். தம் நல்லுளத்தால் உலகையும் ஆற்று வெள்ளத்தையும் முன்னிட்டே, தம் கவிதையைத் தொடங்குகின்றார்.

'மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போலச்
செல்புனல் உழந்த சேய்வரற் கான்யாற்றுக்

கொல்கரை நறும்பொழில்’
(சிறுபாண், 1-4)

என்று வையகத்து மழை பெய்ய அதன்வழிப் பெருக்கெடுத்தோடி வரும் ஆற்றையும், அதன் கரையின் பொழிலையும் பாராட்டித்தான் மேலே, செல்கின்றார். அந்த உவமையில் தமிழ் நாட்டுப் பெண்களுக்கு இயல்பாயமைந்த உடற்பொலிவையும் அவர்தம் அணிகலனையுங்கூட்ச் சுட்டிக்காட்டித் தமிழ் நாட்டுப் பெண்மை நலத்தையும் ஒம்புகின்றார் அவர்.

முல்லைப்பாட்டின் ஆசிரியர் நப்பூதனாருக்கு அவர் பாட்டுக்கேற்ற, திணைக்குரிய, மாரிக் காலமே கைகூடிவிடின், அவர் அதைப் பாராட்டாது விடுவரோ அம் முல்லை நில நிகழ்ச்சியைத் தொடங்குமுன், நில உலகத்தில் எப்படி மழை பொழிந்தது எனக் காட்டுகின்றார். 'திருமால் போன்று மேகம் தண்ணிரைப் பொழிகின்றது. அதனால் உலகம் சிறக்கின்றது.' என அழகு படக் காட்டுகின்றார்.”

'நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வ்லம்புரி பொறித்த் மாதாங்கு தடக்கை
நீேர்செல நிமிர்ந்த மாஅல் ப்ோலப்
பாடிமிழ் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு
கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் பாலை’ (முல்லை. 1-6)

என்பது அவர் வாக்கு, இவ்வாறே மதுரைக் காஞ்சியின் ஆசிரியராகிய ஓங்குயர் விழுச்சீர் மாங்குடி மருதனார்.

‘ஓங்குதிரை வியன்பரப்பின்
ஒலிமுந்நீர் வரம்பாகத்