பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டு

285



இரும்பே ரொக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்’

(சிறுபாண். 130-140)

என்று, அவர்கள் வீட்டு நாயும் தன் குட்டிக்குப் பால் கொடுக்க முடியாத வறுமை என்றும், காளான் பூத்த அடுப்பே அவர்கள் அடுப்பென்றும், மனையாட்டி குப்பையில் விளைந்த வேளைக்கீரையைக் கொய்து வந்து உப்பும் இல்லாமல் ஆக்கினள் என்றும், அதை உண்ணும்போது மற்றவர் காணின் நகைக்கிடனாகுமென்று நாணி மறைத்து உண்டார்கள் என்றும், ஆயினும், அந்த வறுமையிலும் 'இரும்பே ரொக்கலாகிய' சுற்றத்தைத் தழுவியே அக்கீரையையும் உண்டார்கள் என்றும் குறிக்கின்றார். இவ்வாறு புலவர்கள் அக்காலத்தில் கலைஞர்களிடம் நிலைத்துள்ள வறுமை நிலையை வாழ்வோடு பொருத்திக் காட்டுகின்றார்கள். வறுமையிலும் சுற்றம் தழுவுதல் வாழ்வின் அடிப்படையன்றோ! வறுமையில் தாம் உண்ணும் உப்புமற்ற சாதாரணக் கஞ்சியை மற்றவர் காணின் எள்ளி நகைப்பர் என்று நாணுவது இன்றும் நம் வாழ்க்கையில் காணும் ஒன்றன்றோ! இவ்வாழ்க்கையின் நுட்பங்களே விளக்கும் புலவர்களைப் போற்றல் வேண்டுமன்றோ!

இனி, வாடும் இக்கலைஞர் தம் வழிகாட்டுமுகத்தான் ஐவகை நிலத்தினையும் அவற்றில் வாழும் மக்கள் நிலைமையையும் காண இயலும். ஒன்றைக் கண்டு மேலே செல்லலாம். முல்லை நிலத்தில் கோவலர் வாழ்வர். அவர்களிடம் இன்றும் விருந்தாகச் செல்பவர் தயிரும் பாலும் மோரும் பெறுவர் என்பது நம் வாழ்விடைக் காண்பதுதானே! அவர் வாழ்க்கையை உருத்திரங்கண்ணனார் பல அடிகளில் பாராட்டுகிறார்.அவர் வீட்டுக்கு விருந்தினர் சென்றால், தாம் கடைக்குச் சென்று விற்பதற்காக வைத்துள்ள நெய்யைக் கொடுத்து அதற்கு வேறு மாடுகளை வாங்கும் அந்த நல்ல குடிப்பெண்டிர், 'பசுந்தினை மூரல் பாலொடும் உண்ணத்' தருவர். அதைக் கடந்து குறிஞ்சி நிலத்துச் சீருர் செல்லின், ஆங்குள்ளார்.

"நெடுங்குரற் பூளைப் பூவின் அன்ன
குறுந்தாள் வரகின் குறள்அவிழ் சொன்றிப்